BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Saturday, July 14, 2018

பிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும்! - 02 - விதிமுறைகள் #BiggBossTamilRules

01. பிக்பாஸ் ஒரு சர்வதேச நிகழ்ச்சி ஆகும். விதிமுறைகள் யாவும் சர்வதேச நிகழ்ச்சி விதிமுறைகளேயாகும். பிக்பிரதர் என்னும் சர்வதேச நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் இந் நிகழ்ச்சித் தொடர்கள் நடைபெறும்.




02. பிக்பாஸ் வீட்டின் உறுப்பினர்கள் அல்லது போட்டியாளர்கள் வெளி உலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமலும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை போன்ற பொழுதுபோக்கு சாதனங்களும் இல்லாமலும் நிகழ்ச்சிக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட வீட்டினுள் குறிப்பிட்ட நாட்கள் தொடர்ச்சியாக வசிக்க வேண்டும். இணையம் அல்லது கைப்பேசி போன்ற எந்தவொரு தொலைத்தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

03. பிக்பாஸ் என்பவரை நேரடியாகக் கண்களால் காண முடியாது. அவரை குரல் மூலமாகவே உணர வேண்டும். குரல்வழிக் கட்டளைகள் மூலமே போட்டியாளர்களுடனும் மக்களுடனும் உரையாடுவார். 24x7 போட்டியாளர்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பார். பிக்பாஸ் இன் முடிவு இறுதியானது.


04. பிக்பாஸ் வீட்டில் பகலில் உறங்கமுடியாது. இரவில் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகே உறங்கச் செல்ல வேண்டும்.


05. வீட்டில் இருக்கும் காலகட்டத்தில் பிக்பாஸ் வைக்கும் அனைத்து போட்டிகளிலும் (Task) பங்குபற்றுவது கட்டாயமாகும். இரவிலும் கூட போட்டிகளை பிக்பாஸ் வைக்கலாம்.


06. பிக்பாஸ் வீட்டின் உறுப்பினர்கள் அல்லது போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்காக இரு சக உறுப்பினர்களைப் பரிந்துரைக்க வேண்டும். அதிக வாக்குகளைப் பெறும் இருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் வாக்களிப்புக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.


வெளியேற்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் யாரை காப்பாற்ற நினைக்கிறார்களோ அவருக்கே / அவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். குறைவான வாக்குகளைப் பெறுபவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படலாம். மக்கள் வாக்களிக்கும் காலப்பகுதியில் வெளியேற்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவரை அல்லது பலரை வெளியேறாமல் பாதுகாக்கவோ அல்லது அனைவரினதும் வெளியேற்றத்தை இடைநிறுத்தவோ பிக்பாஸ் உரித்துடையவர்.





07. மக்களின் வாக்குகளால் வெளியேற்றப்பட்ட ஒருவரை பிக்பாஸ் வீட்டுக்கு மீள அழைக்கவோ அல்லது புதிய போட்டியாளரை நிகழ்ச்சியின் இடைநடுவில் களமிறக்கவோ முடியும்.


08. பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் மூன்று காரணங்களால் வெளியேற்றப்படலாம். (01) மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறலாம் (02) உடல்நிலை / மனநிலை ஒத்துழைக்காத பட்சத்தில் வெளியேற்றப்படலாம் (03) பிக்பாஸ் விதிமுறைகளை மீறும் போது வெளியேற்றப்படலாம்.


09. பிக்பாஸ் நிகழ்ச்சியின் எல்லா விதிமுறைகளையும் போட்டியாளர்களுக்கோ அல்லது மக்களுக்கோ அறிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சர்வதேச நிகழ்ச்சி அமைப்பு என்பதால் தேவையானபோது மட்டும் குறிப்பிட்ட விதிமுறைகள் பயன்படுத்தப்படும். பொதுவான ஒருசில விதிமுறைகள் நிகழ்ச்சியை தொடர்ந்து நடாத்துவதற்கு அவசியமான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கும்.


10. பிக்பாஸ் வீட்டு உறுப்பினர்கள் / போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒளிப்படக் கருவிகளின் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். உறங்கும் அறை உட்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கழிப்பறை மற்றும் குளியலறைக்குள் ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்படவில்லை. போட்டியாளர்களுக்கு நுண் ஒலிவாங்கி (Microphone) வழங்கப்பட்டிருக்கும். குளியலறை மற்றும் கழிப்பறைகளை பயன்படுத்தும் நேரம் தவிர (உறங்கும் நேரம் உட்பட) நுண் ஒலிவாங்கியை அணிந்திருக்க வேண்டும்.


#BiggBoss #BiggBossTamil #BigBrother #EndamolshineGroup #StarVijayTV #KamalHassan #Oviya #OviyaArmy #Oviyaa #Namitha #Julie #Google  #BiggBossVoteTamil #TN #VivoBiggBoss 

15.09.2017 

No comments:

Post a Comment

Ads

Popular Posts