BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Sunday, October 15, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா?

2017.07.15 ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒன்று கூடும் 'பிக்பாஸ் கொண்டாட்டம்' நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஒருயுகம் போல நகர்ந்தது பிக்பாஸின் ஒவ்வொரு நாட்களும் நமக்கு. பிக்பாஸ் முடிந்ததும் ஒரு யுகம் கூட ஒரு நாளைப் போல கழிந்து கொண்டிருக்கிறது.



இன்னமும் பிக்பாஸ் போட்டியாளர்களைப் பற்றியும் நிகழ்ச்சியைப் பற்றியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் நாம். பிக்பாஸ் வீட்டை நம் வீடாகவும் நம் அயல் வீடாகவும் நினைத்து வந்தோம்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் தனித்தனியே பொது நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்குபற்றி வந்தாலும் அனைவரும் ஒன்று கூடும் முதல் நிகழ்ச்சியாக இந்த 'பிக்பாஸ் கொண்டாட்டம்' நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. நிகழ்ச்சி முன்னோட்டம் மற்றும் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கும் ஒளிப்படங்கள் வாயிலாக குதூகலமான ஒரு சந்திப்பாக இந்த நிகழ்ச்சி அமையுமென எதிர்பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியில் ஓவியா பங்குபற்றுவதை காணவே பலரும் ஆவல் கொண்டிருக்கின்றனர். மேலும் நிகழ்ச்சி முன்னோட்டத்தில் ஓவியாவும் ஆரவ்வும் மேடையில் உரையாடும் காட்சி காணப்படுகிறது. அது என்ன உரையாடலாக இருக்கும் என பலரும் ஆவலாக உள்ளனர்.

பிக்பாஸ் போட்டியாளர்களைக் காண விஜய் தொலைக்காட்சி நேயர்கள் மதியம் மூன்று மணிக்காகக் காத்திருக்கின்றனர். சந்திப்பு குறித்த விவரங்களோடு மீண்டும் சந்திப்போம்!

#BBTamil #BiggBossTamil #BiggBoss #BiggBossTamil1 #BiggBossReUnion #Oviya #OviyaArmy #VijayTV #VijayTelivision #Julie #JimikkiKammal

15.10.2017 

Monday, October 9, 2017

பிக்பாஸ் ஹிந்தி - பருவம் 11 - BIGG BOSS HINDI - SEASON 11

பிக்பாஸ் ஹிந்தி பதினோராவது தடவையாகவும் கலர்ஸ் தொலைக்காட்சியில் (Colors TV - Viacom 18 ) ஒளிபரப்பாகிறது. அக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இம்முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டியாளர்கள் - உறவினர்கள் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த பதினோராவது பருவம் இடம்பெறுகிறது. 14 போட்டியாளர்களும் 04 உறவினர் போட்டியாளர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.



90 கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் மற்றும் நூறு நாட்கள் மக்களுடன் பயணிக்கவிருக்கிறார் பிக்பாஸ். புரியாத மொழிதான் என்றாலும் நமக்குப் பழகிய நிகழ்ச்சி அமைப்பு என்பதால் இலகுவில் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதோ உங்களுக்காக பங்குபற்றும் போட்டியாளர்களின் முழுப் பட்டியல் இங்கே:

Bigg Boss 11 full contestants list:

Hiten Tejwani - ஹிதேன் தேஜ்வானி

Hina Khan - ஹினா கான்

Shilpa Shinde - ஷில்பா ஷிண்டே

Vikas Gupta - விகாஸ் குப்தா

Priyank Sharma - பிரியங்க் ஷர்மா 

Zubair Khan - சுபைர் கான்

Sapna Chaudhary - சப்னா சவுத்ரி

Akash Dadlani - ஆகாஷ் தத்லானி

Arshi Khan - அர்ஷி கான்

Benafsha - பெனாப்ஷா 

Shivani Durgah - ஷிவானி துர்கா

Puneesh Sharma - புனீஷ் ஷர்மா

Bandgi Kalra - பந்த்கி கல்ரா 

Jyoti Kumari - ஜோதி குமாரி



Neighbours: உறவினர்கள்

Luv Tyagi - லுவ் தியாகி 

Mehjabi Siddiqui - மெஹ்ஜாபி சித்திக் 

Sabyasachi Satpathy - சப்யாசாச்சி சத்பாத்தி 

Lucinda Nicholas - லூசிண்டா நிக்கோலஸ் 

பிக்பாஸ் ஹிந்தி பருவம் 11 ஐ வெற்றி கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி இவர்களில் யார்? 

#BB11 #BiggBoss11 #ColorsTV #BiggBoss11Hindi #Viacom18 #RealityShow 

09.10.2017 

Sunday, October 8, 2017

பிக் பாஸ் தெலுங்கு - பருவம் 01 | BIGG BOSS TELUGU - SEASON 01

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியானது எண்டமோல் ஷைன் (Endamol Shine) சர்வதேச குழுமத்தின் மற்றுமோர் படைப்பாகும். ஜூலை 16,2017 முதல் செப்டெம்பர் 24,2017 வரை ஒளிபரப்பானது. 




இந்நிகழ்ச்சி ஸ்டார் மா (Star Maa) தொலைக்காட்சியில் கடந்த 70 நாட்களாக ஒளிபரப்பானது. ஸ்டார் மா தொலைக்காட்சியானது ஸ்டார் இந்தியா (Star India) இன் ஓர் அங்கமாகும். 

பிக்பாஸ் தெலுங்கு தமிழைப் போலவே முதல் பருவமாகும். இப்போட்டியில் 16 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார்.

மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிவ பாலாஜி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூபா ஐம்பது இலட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியாளர்கள் மொத்தமாக 12 கோடி மக்கள் வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ஹரி தேஜா, அர்ச்சனா மற்றும் நவ்தீப் ஆகியோரே ஏனைய இறுதிப்போட்டியாளர்களாவர்.




பல சண்டைகள், பல சிரிப்புகள் சில சர்ச்சைகள் என பல உணர்வுகளையும் கலந்து தந்த பிக்பாஸ் தெலுங்கு முதலாம் பருவம் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் இரண்டாம் பருவத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம்!

#BiggBossTelugu #BiggBoss #OppoBiggBoss #StarMaaTv #EndamolShineGroup #BBTelugu 

08.10.2017 

Thursday, October 5, 2017

பிக் பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆரவ்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஜூன் 25, 2017 இல் துவங்கி செப்டெம்பர் 30, 2017 இல் முடிவுக்கு வந்திருக்கிறது. 98 நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஸ்டார் விஜய் இந்த மெய்நிகர் நிகழ்ச்சித் தொடரினை வெற்றிகரமாக ஒளிபரப்பாக்கியது.
    

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதே சில போட்டியாளர்கள் பிக்பாஸில் பங்குபற்றவும் பல பார்வையாளர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கவும் காரணமாக அமைந்திருந்தது.

பிக்பாஸ் தமிழ் மாபெரும் இறுதிப்போட்டி செப்டெம்பர் 30, 2017 இல் கோலாகலமாக இடம்பெற்றது. இறுதிநாள் நிகழ்ச்சியில் நமீதா மற்றும் ஸ்ரீ ஆகியோரைத் தவிர ஏனைய 17 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். நடனக் கலைஞர் சாண்டியின் நடனத்துடன் துவங்கியது இறுதிப்போட்டி. 



பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆரவ் முதலிடத்தைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சினேகன் இரண்டாம் இடத்தையும் ஹரிஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைக் கைப்பற்றினர். பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் விவோ ( Vivo ) திறன்பேசி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

30 ஒளிப்பதிவுக் கருவிகள், 100 நாட்கள் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலித்த பிக்பாஸ் தமிழ் முதலாம் பருவம் இத்தோடு முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த வருடமளவில் இரண்டாம் பருவத்தை எதிர்பார்க்கலாம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

05.10.2017 

Ads

Popular Posts