பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவல் தொடர்பாக நடிகை லைலா விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இந்த ஆண்டும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
இதற்கான ப்ரமோ வீடியோக்கள் எடுக்கும் பணியில் நிகழ்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வி இப்போதே பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
![]() |
Image credit: Google/ Behind talkies |
நடிகைகள் சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் ரமேஷ் திலக் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை நடிகர் ரமேஷ் திலக் மறுத்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக வந்து கொண்டிருக்கும் செய்தி வதந்தி என்றும் அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியுள்ளார்.
அதேபோல் நடிகை லைலாவும் பிக்பாஸ் 3-ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு தனது சமூகவலைதள பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகை லைலா, “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.
Post on Instagram
How cheap can people get for publicity? Please note that I AM NOT A PART OF BIG BOSS Why is @v4mediaofficial Spreading fake news? #disclaimer #laila #tamilactress #fakenews #donotbelievethelies #donotbelieverumours #bigboss #tamilbigboss #iamnotaparticipant
A post shared by Laila Official (@laila_laughs) on May 9, 2019 at 3:10am PDT
நன்றி: News 18 தமிழ்
பிக் பாஸ் 3-இல் பங்கேற்கிறேனா? - அஜித் பட நடிகை அதிரடி விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ்
https://sigarambiggboss.blogspot.com/2019/05/am-i-participate-in-bb-tamil-3-laila.html
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya
No comments:
Post a Comment