இன்று மக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படும் பேசுபொருளாக 'பிக்பாஸ்' என்னும் சொல் காணப்படுகிறது. யார் இந்த பிக்பாஸ்? அவர் எப்படி இருப்பார்? எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் பலரும் மூளையைக் குழப்பி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை பல மொழிகளில் பிக்பாஸ் நடைபெற்றிருந்தாலும் நமக்கு அறிமுகமானது தமிழ் மொழி வாயிலாகத்தான். சரி, உங்களை அதிகம் யோசிக்க வைக்காமல் 'சிகரம்' இணையத்தளம் வாயிலாக 'பிக்பாஸ்' பற்றிய முழு விவரங்களையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம். பிடித்திருந்தால் சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
'பிக்பாஸ்' என்பது ஒரு சர்வதேச நிறுவனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பு ஆகும். எண்டமோல் ஷைன் குழுமம் (EndamolShine Group) என்னும் நெதர்லாந்து நிறுவனம் 1999 இல் முதன் முதலில் 'பிக்பிரதர்'
என்னும் பெயரில் இந்த நிகழ்ச்சித் தொடரை ஆரம்பித்தது. தற்போது 54 நாடுகளில்
387க்கும் அதிகமான பருவங்களை (Seasons) இந்நிகழ்ச்சித் தொடர் நிறைவு
செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வீட்டு உறுப்பினர்கள் என்று அழைக்கப்படும்
போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சிக்கென விசேடமாக அமைக்கப்பட்ட வெளி உலகத்
தொடர்புகளற்ற வீடொன்றில் குறிப்பிட்ட நாட்களுக்கு வசிக்க வேண்டும்.
கைப்பேசி, எழுதுகருவிகள் மற்றும் வாசிப்பு உபகரணங்கள் என எதையும்
போட்டியாளர்கள் பயன்படுத்த முடியாது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தரப்படும் சவால்களையும் வீட்டின் சவால்களையும் எதிர்கொண்டு இறுதி வாரம் வரை தாக்குப் பிடிப்பவர்களாலேயே வெற்றி பெற முடியும். இந்த நிகழ்ச்சிக்கென குறிப்பிட்ட விதிமுறைகள் உண்டு. ஆனால் எல்லா விதிமுறைகளும் போட்டியாளர்களுக்கோ அல்லது பார்வையாளர்களுக்கோ முழுமையாக தெரியப்படுத்தப்படுவதில்லை. வீட்டில் சில சம்பவங்கள் இடம்பெறும்போதே போட்டியாளர்களுக்கே சில விதிமுறைகள் தெரிய வருகின்றன. அதுவும் பிக்பாஸ் எப்படி சொல்கிறாரோ அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். நம்மைத் தெளிவுபடுத்துவது அவர் நோக்கமாக இருக்காது. மாறாக விதிமுறைகளை அமுல்படுத்துவது அல்லது செயல்படுத்துவது மட்டுமே அவர் நோக்கமாக இருக்கும்.
இதெல்லாம் சரி, யார் இந்த பிக்பாஸ்? அவர் எப்படி இருப்பார்? எங்கே இருக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அவர் உருவமற்றவர் - ஆனால் பேயில்லை, கண்கள் உண்டு - ஆனால் கடவுள் இல்லை. பிக்பாஸ் என்பவருக்கு இதுவரை எந்தவொரு உருவமும் இல்லை. யார் பிக்பாஸ் ஆக செயல்படுகிறார் என்பது வெளிப்படுத்தப்படுவதும் இல்லை. பிக்பாஸ் என்பவரை அவரது குரல் மூலம் மட்டுமே காண, பேச, உணர முடியும். கம்பீரமான அல்லது கடுமையான குரலின் மூலம் போட்டியாளர்களுடன் உரையாடுவார். ஆனால் போட்டியாளர்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை. இல்லத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒளிப்பதிவுக் கருவிகள் மூலம் இருபத்துநான்கு மணித்தியாலமும் போட்டியாளர்களை கண்காணித்துக் கொண்டிருப்பார். அப்படின்னா அவர் தூங்கவே மாட்டாரா? அவர் சாப்பிட மாட்டாரா? இதையெல்லாம் நீங்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது நன்மை பயக்கும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல்முறையாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25, 2017 முதல் ஒளிபரப்பானது. இது நூறு நாட்கள் கொண்ட நிகழ்ச்சி ஆகும். விதிமுறைகள் அனைத்தும் சர்வதேச விதிமுறைகளே பின்பற்றப்படும். நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை வார இறுதி நாட்களில் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் முதலாம் பருவத்தில் ஆரம்பகட்டப் போட்டியாளர்களாக பதினைந்து பேர் களமிறங்கினர். ஐம்பது நாட்களின் பின் புதிய போட்டியாளர்கள் நால்வர் களமிறக்கப்பட்டனர். இதுவரை உலகம் முழுவதும் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழிலும் ஆராவ்வின் 'மருத்துவ முத்தம்' சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. சில முறை உலக நிகழ்ச்சிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியிருக்கின்றன. ஆனாலும் வெற்றிப்பயணம் தடைப்படவில்லை.
இந்தியாவில் திரைத்துறைப் பிரபலங்களை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடாத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இரட்டையர்கள், காதலர்கள், குடும்பம், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரையும் வைத்து பிக்பிரதர் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பிரபலமாகியுள்ள இந்த நிகழ்ச்சியை ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியுள்ளது. இந்தியாவில் மக்கள் வாக்களிப்புக்காக ஸ்டார் நிறுவனம் கூகிளுடன் கைகோர்த்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெற்றிகரமான பருவங்களைப் பூர்த்தி செய்துகொண்டு தமிழகத்தில் பிக்பாஸ் காலடி எடுத்து வைத்துள்ளது.
பிக்பாஸ் பற்றிய அடிப்படையான விடயங்களைத் தெரிந்து கொண்டோம். இனி அடுத்த பகுதியில் பிக்பாஸ் விதிமுறைகள் பற்றி அறிந்துகொள்வோமா?
#BiggBoss #BiggBossTamil #BigBrother #EndamolshineGroup #StarVijayTV #KamalHassan #Oviya #OviyaArmy #Oviyaa #Namitha #Julie #Google #VoteByGoogle #BiggBossVote #BiggBossVoteTamil #TN #VivoBiggBoss #ColorsTV #StarNetwork
09.09.2017

nice blog.thanks for sharing.
ReplyDeletebigg boss 2 tamil news