பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவல் தொடர்பாக விளக்கமளித்துள்ளார் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்.
கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இந்த ஆண்டும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
இதற்கான புரமோ வீடியோக்கள் எடுக்கும் பணியில் நிகழ்ச்சிக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வியை இப்போதே பார்வையாளர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
நடிகைகள் சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாஜ கூறப்பட்ட நிலையில் தற்போது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் ரமேஷ் திலக் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை நடிகர் ரமேஷ் திலக் மறுத்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக வந்து கொண்டிருக்கும் செய்தி வதந்தி என்றும் அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியுள்ளார்.
நன்றி : News 18 தமிழ்
பிக் பாஸ் 3-இல் நான் இல்லை - பிரபல நடிகர் விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ் https://sigarambiggboss.blogspot.com/2019/05/bigg-boss-tamil-season-3-actor-ramesh-thilak-statement.html
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya
No comments:
Post a Comment