என்ன மச்சான்?
சொல்லு மச்சி!
என்னத்த சொல்ல? நானே ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சில இருந்து வெளில போன கவலைல இருக்கேன்...
ஏன், ஜூலியும் தானே வெளிய போனாங்க?
ஆமா. ஆனா ஓவியாவுக்காக கவலைப்படறவங்கள்ல ஒரு சிலர் கூட ஜூலிக்காக வருத்தப்படறதில்ல...
இது தப்பில்லையா?
எது தப்பு? ஜூலி பண்ணது தான் தப்பு. ஓவியா சரியாத்தான் இருந்தாங்க.
ஜூலி
இந்த நிகழ்ச்சி நடக்குற அந்த நூறு நாள் மட்டுமே தன்னோட வாழ்க்கையை
தீர்மானிக்கப் போகுதுன்னு தப்பா நெனச்சிக்கிட்டதுனால தப்பு பண்ணிட்டாங்க.
அதையே பெருசு படுத்திப் பேசுறது தப்பில்லையா?
ஜூலி ஒன்னும் சின்னப் பொண்ணு கெடையாதுல்ல?
ஆமா. ஆனா அந்த பதினாறு பேருக்குள்ள நடக்குற விசயங்களை மட்டும் வச்சி அவங்கள எடை போடுறது நியாயமா?
பேஸ்புக்ல போய்ப் பாரு புரியும். ஓவியாவுக்காக இளைஞர்கள் அப்படியே உருகுறாங்க.
அதே பேஸ்புக்ல தான் ஜூலியை கீழ்த்தரமா விமர்சிச்சும் எழுதறாங்க.
ஜூலி பண்ணது தப்பே இல்லங்குறியா?
நா அப்படி சொல்லல
பின்ன?
நம்ம எல்லோருக்கும் ஓவியாவை ஏன் பிடிக்குது?
ஏன்னா அவங்க எதைப் பத்தியும் கவலைப்படறதில்ல, அன்பா இருக்காங்க, சந்தோசமா இருக்காங்க.
மிகச்சரி. அவங்கள நேசிக்கிற, கொண்டாடுற நம்மளால ஏன் அவங்க குணங்களை பின்பற்ற முடியல?
அது... அது....
ஏன்னா
நாம ஓவியாவா இல்ல, ஜூலிகளாகத்தான் இருக்கோம். நாம என்னிக்கு நமக்கு உள்ள
இருக்குற ஜூலியை வெளிய அனுப்பிட்டு ஓவியாவை உள்ள கூட்டிக்கிட்டு வாறோமோ
அன்னிக்கு தான் நாம ஜூலியை விமர்சிக்க முடியும்.
அதுவும் சரிதான்
பிக்பாஸ் நிகழ்ச்சி பாதி முடிஞ்சிருச்சு. ஆனா நாம இன்னமும் அடுத்தவங்களை குறை சொல்லிக்கிட்டு விமர்சனம் பண்ணிக்கிட்டு இருக்கோம்.
அதாவது நம்மை நாமே சுய பரிசோதனை செய்துக்கணும்னு சொல்ற. அப்படித்தானே?
அப்படியேதான்.க க போ....!
ஆமா, தெலுங்கு பிக்பாஸ் பாத்தியா?
தமிழைப் பார்க்கவே நேரம் போதலை. இதுல அது வேறயா?
பாருடா... 60 ஒளிப்பதிவுக் கருவிகள், 70 நாட்கள், ஜூனியர் என்.டி.ஆருடன்.....
70 நாள் தானா? ஓ... அதுலயும் பதினைஞ்சு பேரா?
இருக்கலாம்....
ஹிந்தில 10 தடவை பிக்பாஸ் ஏற்கனவே முடிஞ்சிடுச்சு. வாற மாசம் பதினோராவது தடவையாவும் ஒளிபரப்பாகப் போகுது.
நடக்கட்டும்... நடக்கட்டும்....
டும்.... டும்.....
#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BIGGBOSSTAMIL1 #VijayTV #BB #BBTamil #SigaramCO
09.08.2017
No comments:
Post a Comment