பிக்பாஸ்
நிகழ்ச்சியில் ரைசாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து போட்டியாளர்களின்
எண்ணிக்கை எட்டாகக் குறைந்தது. இதனால் ஏற்கனவே மக்கள் வாக்குகள் மூலம்
வெளியேற்றப்பட்ட ஜூலி மற்றும் ஆர்த்தி ஒரு வாரத்திற்கு விருந்தினர்களாக
வீட்டுக்குள் அனுப்பப் பட்டுள்ளனர். இவர்கள் இருவரினதும் வருகை இல்ல
உறுப்பினர்களிடையே மாத்திரமின்றி மக்களிடையேயும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
சினேகன்
இன்றைய நிகழ்ச்சியில் (29/08) "பழையவங்க நாம நாலு பேரு தான்
இருக்கோம். நமக்கு வெளில நடக்குறது எதுவுமே தெரியாது. புதுசா வந்திருக்குற
நாலு பேரும் வெளில இருந்து நிகழ்ச்சிய பார்த்துட்டு வந்தவுங்க. ஜூலியும்
ஆர்த்தியும் உள்ளேயும் வெளியேயும் பார்த்துட்டு வந்திருக்காங்க. விளையாட்டு
எப்படிப் போகுதுன்னே தெரியலையே?" என்று குறிப்பிட்டிருந்தார். உண்மை தான்.
பிக்பாஸ் மனதில் என்ன இருக்கிறதோ?
ஒன்பதாம்
வாரஇறுதி நிகழ்ச்சியில் கமல் முன்பு காயத்ரி, சக்தி, ஆர்த்தி மற்றும் ஜூலி
ஆகியோர் வந்தபோது யாரும் கைதட்டவில்லை. ஆனால் பரணிக்கு கரவொலி எழுப்பி
உற்சாகப்படுத்தினர். இது அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் பிக்பாஸ் இல்ல உறுப்பினர்களும் ஜூலியின் வருகையை ரசிக்கவில்லை.
ஜூலியும் ஆர்த்தியும் ஒரு வாரத்திற்கு மட்டுமே இந்த வீட்டில் இருப்பார்கள்
என்று பிக்பாஸ் அறிவித்தாலும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று
ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
இந்த
வாரம் காஜல், சினேகன் மற்றும் ஆரவ் ஆகியோர் வெளியேற்றத்திற்காக
பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஓவியாவின் ரசிகர்கள் ஆரவ்வை வெளியேற்றத்
திட்டமிட்டுள்ளனர். இதற்காக தங்கள் பேஸ்புக் பக்கங்கள் மூலமாக தீவிர
பிரச்சாரம் செய்து வருகின்றனர். எது எப்படியிருந்த போதிலும் பல
கேள்விகளுக்கு இவ்வார இறுதியில் விடை கிடைத்துவிடும்.
பிக்பாஸ் பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது புதிய பேஸ்புக் பக்கத்தை விருப்பக்குறியிடுங்கள் : BIGG BOSS TAMIL அல்லது https://www.facebook.com/biggbosstamil1/
பிக்பாஸ் பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது புதிய பேஸ்புக் பக்கத்தை விருப்பக்குறியிடுங்கள் : BIGG BOSS TAMIL அல்லது https://www.facebook.com/biggbosstamil1/
#BIGG-BOSS-TAMIL-WEEK-10-JULIE-AND-AARTHI-RE-ENTRY #BIGGBOSS #BIGGBOSSTAMIL #OVIYA #OVIYAARMY #VIJAYTELIVISION #BIGGBOSSVOTE #BIGGBOSSTAMILVOTE #KAMALHASSAN #JULIE #AARTHI #HARATHI
29.08.2017
No comments:
Post a Comment