கலகலப்பாக ஆரம்பித்த பிக் பாஸ் வீடு வெலவெலத்துப் போயிருக்கிறது. அமைதியான பெண்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் அதிரடி காட்டியிருக்கிறார்கள்.
மீரா மிதுன் அடுத்த ஜூலியோ என்று எண்ணத் தோன்றுகிறது. யார் எதைச் சொன்னாலும் அதனை முழுமையாகக் கேட்காமல் விதண்டாவாதம் செய்கிறார் மீரா. இப்படியே போனால் இந்த வாரமே அவர் வீட்டுக்கு நடையைக் கட்ட வேண்டியது தான்.
வனிதா தான் வீட்டின் அதிகார மையம். சேரனும் பாத்திமாவும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாகத் தெரிகிறார்கள்.
எப்போதுமே பிக் பாஸ் வீட்டில் வார நாட்களில் தான் சண்டையாக இருக்கும். கமல் வரும் நாளில் நல்லபிள்ளை போல அமர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த முறை கமல் வந்த முதல் வாரமே கமல் முன்னிலையிலேயே கலவரத்தை நிகழ்த்திக் காண்பித்து விட்டார்கள்.
மதுமிதா கொஞ்சம் பிற்போக்கானவராகத் தெரிகிறார். ஒரு வேளை அவர் வளர்ந்த சூழல் அவ்வாறானதாக இருக்கலாம்.
இப்போது போட்டியாளர்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டுவிட்டன. முதல்வாரத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கதைகளையும் கேட்டுக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தோம்.

பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் - 02 | நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள்?
This poll has ended at 7/7/2019, 7:00:00 PM
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனையெத்தனை சோகங்கள்? பிக் பாஸ் போட்டியாளர்களின் சோகங்களோடு ஒப்பிடும்போது நாமெல்லாம் அதை விட நூறு மடங்கு நன்றாக வாழ்கிறோம் எனத் தோன்றுகிறது.
முதல்வாரம் வெளியேற்றப் படலம் இல்லை. 'நாமினேஷன்னா என்னங்கய்யா?' என்று கேள்விகேட்ட கஞ்சா கருப்பு நம் கண்முன் வந்துபோகிறார். இந்த இரண்டாம் வாரத்தில் நிச்சயம் வெளியேற்றம் உண்டு.

பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் - 02 | உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்?
This poll has ended at 7/7/2019, 7:00:00 PM
பிக் பாஸ் ஆரம்ப நிகழ்வில் கமல் கையில் 17 அட்டைகள் இருந்தன. 16 பேர் வந்துவிட்டார்கள். இன்னும் ஒருவர் வர வேண்டும். அவர் சில வேளை இந்த வாரம் வரலாம். அல்லது அவர் ஞாயிற்றுக்கிழமை அத்தியாயத்தின் சண்டைகளைப் பார்த்துவிட்டு அப்படியே திரும்பி ஓடியும் போயிருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
வனிதாவின் தலைமைப் பொறுப்பு மோஹன் வைத்யாவின் கரங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நல்ல ஜாலியான மனிதராகத் தெரிந்த அவரும் கோபப்பட ஆரம்பித்திருக்கிறார்.
இன்னும் என்னவெல்லாம் நடக்கக் காத்திருக்கிறதோ???
பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் 01 & 02 | நாள் 03-08 | புதிய தலைவர் மோஹன் வைத்யா
https://sigarambiggboss.blogspot.com/2019/07/bigg-boss-tamil-3-week-01-and-02-day-03-to-08-new-captain-mohan-vaithya.html
#BiggBossTamil3 #BiggBossTamil #BiggBossTamilVote #BiggBossTamilSeason3 #BiggBoss #Biggboss3tamil #BiggBossTamilS3 #MugenRao #Losliya #LosliyaArmy #MeeraMithun #BBDailyUpdates
No comments:
Post a Comment