பிக் பாஸ் தமிழ் 2 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் கட்ட போட்டியாளர்கள் 16 பேரும் இடைநிலை போட்டியாளர் ஒருவருமாக 17 பேர் பங்கு பற்றியுள்ளனர். 13ஆவது வார வெளியேற்றத்தைத் தொடர்ந்து 6 பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
13ஆவது வாரத்தில் ரித்விகா அதிக வாக்குகளைப் பெற்று முதலில் காப்பாற்றப்பட்டார். இரண்டாம் இடத்தை விஜயலட்சுமி பிடித்தார். ஐஸ்வர்யா மற்றும் மும்தாஜ் இருவரில் யார் வெளியேறுவது என்கிற பரபரப்பான கட்டம். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மும்தாஜ் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
தற்போது பாலாஜி, ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய ஆறு போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். நான்கு தமிழ்ப் போட்டியாளர்களும் இரண்டு வேற்று மொழிப் போட்டியாளர்களும் உள்ளனர். ஐந்து பெண் போட்டியாளர்களுக்கு மத்தியில் பாலாஜி மட்டும் தனி ஆண் போட்டியாளராக உள்ளார்.
ஜனனி 13ஆம் வாரத்தில் இடம்பெற்ற Ticket to finale எனப்படும் இறுதிப்போட்டிக்கான துருப்புச் சீட்டை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வானார். 14ஆம் வாரத்தில் இரண்டு பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இறுதிப்போட்டிக்கு மொத்தம் நால்வர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கடந்த முறையைப் போல இந்த முறை போட்டிகள் கடுமையாக இல்லை. இரண்டாம் பருவ போட்டியாளர்கள் விரலில் அடிபட்டால் கூட உயிரே போனது போல அலறுகின்றனர். இது பிக் பாஸுக்கு பீதியைக் கிளப்பியிருக்கலாம். அதனால் தானோ என்னவோ இந்த முறை போட்டியாளர்களிடம் பிக் பாஸ் கடுமை காட்டவில்லை.
பிக் பாஸ் பட்டத்தை பாலாஜி வெல்வது சாத்தியமானதாகத் தோன்றவில்லை. ஆனாலும் ஆண் போட்டியாளர்களின் சார்பில் இறுதிப் போட்டியை எட்டிப் பார்ப்பாரா என்பது சந்தேகமே. ஐஸ்வர்யா அல்லது யாஷிகா இருவரில் ஒருவர் நிச்சயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். ரித்விகாவிற்கும் வாய்ப்பு நிச்சயம். விஜயலட்சுமிக்கான வாய்ப்பு சந்தேகமே.
இந்த முறை பிக் பாஸ் 105 நாட்கள் இடம்பெறும் என்பது கூடுதல் தகவல். 91 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் இரண்டே வாரங்கள் தான் உள்ளது வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க. பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தின் வெற்றியாளர் யார்? அறிந்து கொள்ள காத்திருப்போம்!
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO
No comments:
Post a Comment