பிக் பாஸ் தமிழ் மூன்றாம் பருவம் வெற்றிகரமாக மூன்று வாரங்களை நிறைவு செய்திருக்கிறது.
மூன்றாம் வாரத்தின் நிறைவில் பிக் பாஸின் சொர்ணாக்கா என்று சொல்லப்படக் கூடிய வனிதா வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டையே தன் குரலால் அடிமைப்படுத்தி வைத்திருந்த வனிதாவின் பிடியில் இருந்து பிக் பாஸ் வீடு இப்போது விடுதலை அடைந்திருக்கிறது.
வனிதா இரகசிய அறைக்கு அனுப்பப்படுவாரா என்கிற சந்தேகம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, நமது ரசிகர்களில் பலருக்கே இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை. அவர் முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
ஆனால், அவர் மக்களின் வாக்குகளால் மட்டும் தான் வெளியேற்றப்பட்டாரா என்பது சந்தேகமே.
ஏனெனில், வனிதாவின் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக பொலிஸார் பிக் பாஸ் வீட்டுக்கே வந்து விசாரித்துவிட்டுச் சென்றார்கள்.
அப்போது பொலிஸாரை பிக் பாஸ் ஒருவாறாக சமாளித்துவிட்டார். ஆனால் இந்நிலைமை தொடரக் கூடாது என்றால் வனிதா வெளியேற்றப்பட வேண்டும். அத்துடன் அது பிக் பாஸ் எடுத்த முடிவாகவும் இருக்கக் கூடாது. ஆகவே மக்களின் பெயரால் பிக் பாஸே அவரை வெளியேற்றியிருக்கலாம்.
இரண்டாம் வாரத்தில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.
அவர் பேச முற்பட்ட போதெல்லாம் வனிதாவால் அடக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.
ஆனாலும் அவர் அநியாயமாக நடந்துகொண்டார் என்று சொல்ல முடியாது. அவர் இன்னும் சில வாரங்கள் இருந்திருக்கலாம்.
பிக் பாஸ் வீட்டின் நான்காவது வாரத்துக்கான தலைவராக சாக்ஷி தெரிவாகியிருக்கிறார். வனிதா இல்லாத சூழலில் மீரா, சேரன், சரவணன் போன்றோரிடமிருந்தான எதிர்ப்புகளை அவர் சமாளிக்க நேரும்.
வனிதாவைப் போலவே மீராவும் தான் பேசுவதைத் தான் மற்றவர்கள் கேட்க வேண்டும், தான் சொல்வது தான் சரி என்கிற மனநிலையில் செயல்படுகிறார்.
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த வாரம் மீரா வெளியேற்றப்படுவது நிச்சயம்.
அபிராமி, வனிதா என்கிற மாயையில் இருந்து விடுபட்டிருக்கிறார். ஆனால் அவரது தோழிகள் மூவரும் இன்னும் வனிதா மாயையில் இருந்து விடுபடவில்லை. சில குறும்படங்களைப் போட்டுக் காட்டியிருந்தால் எல்லாம் தெளிவாகியிருக்கும்.
22ஆம் நாளில் வெளியேற்றப் படலம் நடக்கும். இம்முறை பொதுவெளியில் இடம்பெறும் எனத் தோன்றுகிறது. பிக் பாஸுக்கும் எதாவது பிரச்சினை வேண்டுமில்லையா?
சரி, பார்க்கலாம்...
பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் 02 & 03 | நாள் 09-21 | பிக் பாஸின் சொர்ணாக்கா வெளியேறினார்
https://sigarambiggboss.blogspot.com/2019/07/bigg-boss-tamil-3-week-02-and-03-day-09-to-21-vanitha-eliminated.html
#BiggBossTamil3 #BiggBossTamil #BiggBossTamilVote #BiggBossTamilSeason3 #BiggBoss #Biggboss3tamil #BiggBossTamilS3 #MugenRao #Losliya #LosliyaArmy #MeeraMithun #BBDailyUpdates