பிக் பாஸ் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. ஆங்காங்கே குழுக்கள் முளைத்திருக்கின்றன. ஆங்காங்கே விமர்சனங்கள் உருவாகி வருகின்றன. ரகசியம் பேசுவதும் புறம் பேசுவதுமாய் உண்மைகள் வெளிவருகின்றன.
இன்றைய நாளின் இறுதிக் கட்டத்தில் நடந்திருந்தாலும் முதலிலேயே ஞாபகப்படுத்த வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. அது புது வரவு.
மீரா மிதுன் 16ஆவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இரண்டாம் நாளின் இரவுப் பொழுதில் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
வந்ததும் வராததுமாக சரவணன் மீனாட்சி புகழ் கவினின் தலைமையிலான இளம் கன்னிகள் அணி மீரா மிதுனுடன் குறைபடத் தொடங்கியிருக்கிறார்கள்.
அப்புறமென்ன? பிக் பாஸ் நினைச்சதை சாதித்த திருப்தியோடு உறங்கப் போயிருப்பார்.
குத்துப் பாட்டும் கோலகலமுமாக பிக் பாஸ் வீட்டின் பொழுது கழிகிறது. வீட்டின் தலைவர் வனிதா மும்தாஜைப் போல கறார் பேர்வழியாக இருப்பார் போலிருக்கிறது. உணவு சமைக்கும் விவகாரத்தில் வனிதா மிரட்டும் தொனியில் பேசுவதாக சாக்ஷி குறைபட்டுக் கொண்டார்.
கவின் மீதான தனது ஈர்ப்பை அவரிடமே நேரடியாகத் தெரிவித்துவிட்டார் அபிராமி (பிக் பாஸ் ஆரம்ப நிகழ்வின் மேக்கப் கலைந்த பின் இவரது முகத்தை அடையாளம் காண முடியாததால் நேற்று நாம் இவரின் பெயரைக் குறிப்ப்பிடவில்லை). ஆனால் அவர் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள அபிராமி கொஞ்சம் கடுப்பாகிவிட்டார்.
பிக் பாஸின் டாஸ்க்குகள் எவையும் இன்னும் வரவில்லை. சாண்டிக்கு மட்டும் பாட்டு சொல்லிக் கொடுக்கும் வேலையைக் கொடுத்திருக்கிறார். சென்னைத் தமிழில் பாட்டு சொல்லிக் கொடுக்கிறார் சாண்டி. அனந்த் வைத்தியநாதனைப் போல அல்லாமல் மோஹன் வைத்யா இயல்பாகப் பழகுகிறார்.
இந்த வாரம் முழுக்க இப்படியே நகருமா? அல்லது உட்கட்சிப் பூசல்கள் எல்லாம் பெரும் மோதல்களாக வெடிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
உங்கள் அபிமான போட்டியாளரைத் தெரிவு செய்யும் எமது வாக்களிப்பில் உங்கள் வாக்குகளை வழங்க மறக்காதீர்கள்!
பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் - 01 | உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்?

பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் - 01 | உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்?
This poll has ended at 6/29/2019, 7:00:00 PM
பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் 01 | நாள் 02 | புது வரவு மீரா மிதுன்
https://sigarambiggboss.blogspot.com/2019/06/BBTamil3-Week01-D01-New-Entry-Meera-Mithun.html
#BiggBossTamil3 #BiggBossTamil #BiggBossTamilVote #BiggBossTamilSeason3 #BiggBoss #Biggboss3tamil #BiggBossTamilS3 #MugenRao #Losliya #LosliyaArmy #MeeraMithun #BBDailyUpdates
No comments:
Post a Comment