BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Sunday, April 7, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 02

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - 2019க்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்று அனல் பறக்கும் பிரச்சாரங்கள் துவங்கி விட்டன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் கீழ் ஏனைய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. 

நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. கமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல்வர் நாற்காலியைக் குறி வைத்திருக்கலாம். 

கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததால் பிக் பாஸ் மூன்றாம் பருவத்தை அவர் தொகுத்து வழங்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகியிருக்கின்றன. 



நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை பொறுத்து அவரது முடிவும் மாற்றமடையலாம். தேர்தலையொட்டி அவரது இந்தியன் 2 திரைப்படமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருந்தால் பிக் பாஸை அவர் புறக்கணிக்கக் கூடும். ஏனெனில் பிக் பாஸ் அரசியல் ரீதியாக அவருக்கு விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் தரலாம். 

பிக் பாஸ் என்றாலே கமல் தான் என்கிற அளவுக்கு நம் மனதில் பதிந்து போயிருக்கிறது. அவர் இல்லாவிட்டால் வேறு யாராக இருக்கக் கூடும்? 

கம்பீரமான குரலும் கண்டிப்புடனான தொகுத்தளிக்கும் முறையையும் கொண்டவர் வேறு யாராக இருக்கலாம்? நடிகர் சூர்யா பரிசீலிக்கப்படலாம். அஜித்தோ அல்லது விஜய்யோ வர வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். 

முதல் இரு பருவங்களில் கலந்து கொண்ட ஒருவரோ அல்லது விஜய் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஒருவரோ தொகுத்து வழங்கும் வாய்ப்புகளும் இல்லை. சிலவேளைகளில் சிவகார்த்திகேயன் பெயர் பரிசீலனைக்கு எடுக்கப்படலாம். அவ்வாறான வேண்டுகோள் ஒன்று விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தால் விடுக்கப்பட்டால் அதனை அவரும் மறுக்கும் வாய்ப்பில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் சின்னத்திரையில் தோன்றும் வாய்ப்பை இழக்க விரும்ப மாட்டார். 

விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி போன்றவர்களும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரலாம். 

எதுவாயினும் அடுத்த மாத இறுதியிலேயே உத்தியோக பூர்வ தகவல் வெளியாகும். நமது ஊகங்களின் நிகழ்தகவை அதன் போதுதான் சரிபார்க்க முடியும். 

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 02 
https://sigarambiggboss.blogspot.com/2019/04/BIGG-BOSS-TAMIL-SEASON-3-A-TRAVEL-02.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya

No comments:

Post a Comment

Ads

Popular Posts