பிக்பாஸ்
தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் மூன்று
வாரங்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் 11 ஆம் வாரத்துக்கான சனிக்கிழமை பகுதி
ஒளிபரப்பாகி முடிந்துள்ளது. இன்றைய ஞாயிறு பகுதியில் இந்த வாரம்
வெளியேறப்போவது யார் என்பது தெரிந்துவிடும். சனிக்கிழமை பகுதியையும் ஞாயிறு
முன்னோட்டங்களையும் வைத்துப் பார்க்கும் போது இன்று யாரும்
வெளியேற்றப்படமாட்டார்கள் என யூகிக்க முடிகிறது.
ஆனால்
வெற்றிக்காகப் போராடும் போட்டியாளர்கள் ஏழு பேர் உள்ளனர். இன்னும் மூன்று
வாரம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒருவர் எனக் கணக்கிட்டால் இறுதிப்போட்டியில்
நால்வர் இருப்பார்கள். சர்வதேச விதிமுறைகளின் கீழ் மூவரே இருக்க முடியும்.
மேலும் முன்னர் வெளியேற்றம் இல்லாத வாரம் குறித்து பார்வையாளர்களுக்கு
அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இவ்வாரம் அவ்வாறான அறிவிப்புகள் எதுவும்
இல்லை. மேலும் அறிவித்த படியே செய்ய வேண்டும் என்ற விதிமுறை இல்லை. ஆகவே
இறுதிநேரத்தில் வெளியேற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்படலாம்.
பிக்பாஸ்
விருந்தினர்களாக வந்துள்ள ஜூலி, ஆர்த்தி மற்றும் சக்தி ஆகியோர் இவ்வாரமும்
வெளியேற்றப்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இறுதிநாள் வரை
விருந்தினர்களாக நீடிக்கலாம். ஓவியா, பரணி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோரும்
எதிர்வரும் வாரங்களில் விருந்தினர்களாக களமிறக்கப்படலாம். முழுமையான
முடிவு இன்று இரவு 8.30 மணிக்கு, உங்கள் விஜய் தொலைக்காட்சியில்.
காணத்தவறாதீர்கள்!
#BiggBoss
#BiggBossTamil #BigBrother #EndamolshineGroup #StarVijayTV #KamalHassan
#Oviya #OviyaArmy #Oviyaa #Namitha #Julie #Google #VoteByGoogle
#BiggBossVote #BiggBossVoteTamil #TN #VivoBiggBoss
10.09.2017
No comments:
Post a Comment