பிக்பாஸ்
தமிழ் நிகழ்ச்சி தற்போது மிக வெற்றிகரமாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில்
ஜூன் 25 ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்களைக் கொண்ட
இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பன்னிரெண்டாம் வாரத்துக்கான
வெளியேற்றத்திற்குப் பின் ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்தில்
எஞ்சியுள்ளனர்.
வெற்றிக்கான
தங்கத் துருப்புச் சீட்டை வெற்றிகொண்டதன் மூலம் சினேகன் அடுத்து வரும்
இரண்டு வாரங்களுக்கான வெளியேற்றத்தின் மூலம் இருவர் வெளியேற்றப்பட உள்ளனர்.
மீதமிருக்கும் மூவர் இறுதிப் போட்டியில் சினேகனுடன் பங்கு கொள்வார்கள்.
சினேகன், கணேஷ், ஹரிஷ், ஆரவ், சுஜா மற்றும் பிந்து ஆகிய ஆறு போட்டியாளர்களே
தற்போது போட்டியில் உள்ளனர்.
இறுதிப்போட்டி
எப்போது நடைபெறும், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து அறிய மக்கள் மிக
ஆர்வமாக உள்ளனர். தற்போது அது குறித்த சிறிய தகவலொன்று நம் கைக்குக்
கிட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்த தினத்துடன்
பார்க்கும் போது அக்டோபர் மூன்றாம் திகதி செவ்வாயன்று தான் இறுதிப்போட்டி
நடைபெற வேண்டும். ஆனால் அக்டோபர் இரண்டாம் திகதி முதல் பிக்பாஸ்
ஒளிபரப்பாகும் நேரமான இரவு ஒன்பது மணிக்கு 'தமிழ்க் கடவுள் முருகன்'
என்னும் பக்தி நெடுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் தொலைக்காட்சி
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆகவே
அக்டோபர் ஒன்றாம் திகதி பிக்பாஸ் இறுதிப்போட்டி நடைபெறும் என ஊகிக்க
முடிகிறது. அப்படியானால் பிக்பாஸ் 98 நாட்களோடு முடிந்து விடுமா? அல்லது
இரண்டு நாட்களுக்கான ஒளிப்பதிவுகளை கையில் வைத்துக் கொண்டு விஜய்
தொலைக்காட்சி மக்களை ஏமாற்றுகிறதா? விடை பிக்பாஸுக்கும் விஜய்
தொலைக்காட்சிக்கும் மட்டுமே தெரியும். கமலுக்கும் கூட தெரிந்திருக்கலாம்!
#BiggBoss
#BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV
#VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO
17.09.2017
No comments:
Post a Comment