BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Thursday, September 21, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - இறுதிப்போட்டி செப் 30 இல்! விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு! #BiggBossTamilFinal

பிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை விஜய் தொலைக்காட்சி வழங்கியுள்ளது. ஜூன் 25 ஆம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிக்பாஸ் இன் இறுதி நாளாக அக்டோபர் இரண்டாம் திகதியே அமைகிறது.

இந்நிலையில் அக்டோபர் இரண்டாம் திகதி முதல் 'தமிழ்க் கடவுள் முருகன்' என்னும் தொலைக்காட்சித் தொடர் பிக்பாஸ் ஒளிபரப்பு நேரமான இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஆகவே அக்டோபர் முதலாம் திகதி இறுதிப்போட்டி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.



ஆனால் விஜய் தொலைக்காட்சி செப்டெம்பர் 30 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக்க தீர்மானித்துள்ளது. ஆகவே கணக்குப்படி 97 ஆம் நாளில் நிகழ்ச்சி நிறைவடைகிறது. 

முதல் நாள் நிகழ்வுகளைத் தொகுத்து அடுத்த நாள் காட்டுகிறார்கள் என்பது தான் நம் கருதுகோள். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறதா என்னும் சந்தேகம் இங்கு எழுகிறது.

பிக்பாஸ் இறுதிப்போட்டி வீட்டுக்குள்ளேயே நடைபெறுமா அல்லது பிரம்மாண்ட மேடையில் நடைபெறுமா என்பது குறித்து தகவலில்லை. எது எப்படியிருந்த போதிலும் பிக்பாஸ் வெற்றியாளருக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!




#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

21.09.2017 

Wednesday, September 20, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

விதிமுறைகள்: 

* காலை கண்விழிக்கும் பாடலுக்கு எல்லோரும் ஆட வேண்டும்! மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும். 

* பகலில் தூங்கவோ கட்டிலில் படுக்கவோ கூடாது. மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும். 

* ஒலிவாங்கியை கழற்றுவதோ போட மறுப்பதோ குற்றம். மீறினால் பத்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும். 

* போட்டிகளுக்கு தயாராக தாமதமானால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும். 


இந்தப் போட்டிகளில் ஒவ்வொருவரும் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்கள் வருமாறு :

86 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 02 ) :

ஆரவ் - 20
சுஜா - 18
சினேகன் - 15
கணேஷ் - 14
பிந்து - 10
ஹரிஷ் - 08

85 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 01 ) : 

கணேஷ் - 04
சுஜா - 03
ஹரிஷ் - 03 




#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

20.09.2017 

Tuesday, September 19, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossTamilVote

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறியோர்:

01. ஓவியா 
02. பரணி 
03. ஸ்ரீ 

மக்கள் வாக்குகளின் மூலம் வெளியேற்றப் பட்டோர் :


04. ஜூலி 
05. சக்தி 
06. நமீதா 
07. ஆர்த்தி 
08. கஞ்சா கருப்பு 
09. அனுயா 
10. காயத்ரி
11. ரைசா
12. காஜல்
13. வையாபுரி 





முதல் கட்ட போட்டியாளர்களில் இன்னும் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள்:

14. ஆரவ் 
15. சினேகன்
16. கணேஷ் 

புது வரவுகள்:

17. ஹரிஷ் 
18. சுஜா வருணி 
19. பிந்து மாதவி

பிக்பாஸ் விருந்தினர்களாக வந்தவர்கள் :


(11ஆம் வாரம் வெளியேறினர்)

* ஜூலி

* ஆர்த்தி
* சக்தி

(இவர்கள் மூவருமே மக்கள் வாக்குகளால் வெளியேற்றப்பட்டவர்கள். ஆனால் பிக்பாஸ் விருந்தினர்களாக மட்டும் வீட்டில் இருந்தனர்)

  
வாரம் 13 - வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்:

#ஆரவ் 
#கணேஷ் 
#பிந்து
#ஹரிஷ்
#சுஜா 

// பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் இவ்வாரம் போட்டியாளர்கள் வெளியேற்றும் நபர்களைப் பரிந்துரைக்கவில்லை. பிக்பாஸ் வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெற்றி கொண்ட சினேகனைத் தவிர மற்றைய ஐந்து போட்டியாளர்களையும் வெளியேற்றத்திற்காக பரிந்துரைத்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இவ்வாரம் நடக்கும் போட்டிகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுபவர் நேரடியாக பிக்பாஸினால் காப்பாற்றப்படுவார். //

வாக்களிப்பு முறை:

   
# பிக்பாஸ் வாக்களிப்புக்கு இங்கே சொடுக்கவும்: 'பிக்பாஸ் தமிழ் - வாக்களிப்பு' 'BIGG BOSS TAMIL VOTE'

அல்லது 

''BIGG BOSS TAMIL VOTE' அல்லது ''BIGG BOSS VOTE' என கூகுளில் தேடுங்கள்.

ஒரு வாக்காளருக்கு ஒரு நாளைக்கு ஐம்பது வாக்குகள் வழங்கப்படும். 

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வாக்களிக்க முடியாது.

இந்திய பார்வையாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இந்தியாவுக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள் https://www.google.co.in முகவரிக்கு சென்று வாக்களிக்க முடியும்.




# தவறிய அழைப்பு முறையில் ( Missed Call ) வாக்களிக்கலாம்.


இதில் இந்திய வாக்காளர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். ஒரு வாக்காளருக்கு பத்து வாக்குகள் மட்டுமே வழங்கப்படும்.

அழைப்பு இலக்கங்கள் ( வாரம் 13 )

ஆரவ்           : 7210122301
கணேஷ்       : 7210122304
பிந்து            : 7210122316
ஹரிஷ்        : 7210122318
சுஜா             : 7210122319

முக்கிய குறிப்பு : நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஒரு போட்டியாளரைக் காப்பாற்ற அளிக்கும் வாக்காகும். அதாவது நீங்கள் யாரைக் காப்பாற்ற நினைக்கிறீர்களோ அவருக்கு / அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வெளியேற்ற நினைக்கும் நபருக்கு வாக்களிக்கக் கூடாது. விருப்பு வாக்கு ஒழுங்கின்படி இறங்கு வரிசையில் உங்கள் முதன்மைப் பட்டியலின் அடிப்படையில் வாக்களியுங்கள்!


வாரத்தின் அடிப்படையில் வெளியேறியோர் பட்டியல் :

வாரம் 01 - ஸ்ரீ ( தானாக வெளியேறினார்) 
                      அனுயா 
வாரம் 02 - கஞ்சா கருப்பு 
                      பரணி ( தானாக வெளியேறினார்)
வாரம் 03 - ஆர்த்தி 
வாரம் 04 - நமீதா 
வாரம் 05 - வெளியேற்றம் இல்லை 
வாரம் 06 - ஜூலி 
                      ஓவியா ( தானாக வெளியேறினார்)
வாரம் 07 - சக்தி 
வாரம் 08 - காயத்ரி 
வாரம் 09 - ரைசா
வாரம் 10 - காஜல்
வாரம் 11 - வெளியேற்றம் இல்லை ( சுஜா போலியாக வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார் )
வாரம் 12 - வையாபுரி
வாரம் 13 - ???
வாரம் 14 - ???
வாரம் 15 - வெற்றியாளர்


வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இன்றி விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் வசித்து வரும் போட்டியாளர்களில் மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்? ஞாயிறன்று மக்கள் தீர்ப்பு வெளியாகும். அதுவரை நாமும் அவர்களைப் பற்றி புறம் பேசுவோம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO

19.09.2017 

Monday, September 18, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 12 - சினேகன் உள்ளே; வையாபுரி வெளியே!

பிக்பாஸ் தமிழின் பன்னிரண்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டுக்கான (Golden Winning Ticket) வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இந்த வாரத்தில் இடம்பெற்ற தங்கத் துருப்புச் சீட்டுக்கான போட்டிகளின் புள்ளிப் பட்டியலின் படி சினேகன் முதலிடத்தைத் தட்டிச் சென்றார். ஆகவே சினேகன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் இறுதிப் போட்டிக்குத் தேர்வான முதல் போட்டியாளராகவும் சினேகன் மாறியுள்ளார். 

கமல் அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து நேரடியாக தங்கத் துருப்புச் சீட்டை சினேகனுக்கு வழங்கி வைத்தார். ஆரவ் இரண்டாவது இடத்தையும் பிந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கமல் போட்டியாளர்களுடன் சுவாரசியமாக உரையாடினார். இன்று வெளியேறுபவரையும் கமல் கையோடு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் மேடைக்குச் சென்று தனது பணியைத் தொடர்ந்தார்.




ஆரவ், சினேகன், வையாபுரி மற்றும் ஹரிஷ் ஆகிய நால்வரே இவ்வாரத்துக்கான வெளியேறும் போட்டியில் இருந்தனர். இவர்களுள் ஹரிஷ் சனிக்கிழமை அத்தியாயத்தின் மூலம் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். சினேகன் வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெற்றி கொண்டதன் மூலம் காப்பாற்றப்பட்டார். மீதமிருந்த இருவரில் வையாபுரி வெளியேறுபவராக அறிவிக்கப்பட்டார். ஏனைய போட்டியாளர்களைப் போலல்லாது வையாபுரிக்கான விடைபெறும் குறும்படம் வீட்டிலுள்ள அனைவரின் முன்னிலையிலும் காண்பிக்கப்பட்டது சிறப்பு.

குறும்படத்தின் போது சிறிது கண்கலங்கிய வையாபுரி அதன் பிறகு கண்ணீர் சிந்தவேயில்லை. இந்த முடிவை அவர் எதிர்பார்த்திருக்கக் கூடும். பிக்பாஸ் வீட்டின் ஏனைய உறுப்பினர்களும் கண்ணீர் சிந்தினர். அவர்களைப் போலவே நாமும் வையாபுரியின் நகைச்சுவை கலாட்டாக்களை நிச்சயம் தவற விடுவோம் என்பது மட்டும் உண்மை!




#BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

18.09.2017 

Sunday, September 17, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - அக்டோபர் முதலாம் திகதி மாபெரும் இறுதிப்போட்டியா? #BiggBossTamilFinal

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது மிக வெற்றிகரமாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25 ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்களைக் கொண்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பன்னிரெண்டாம் வாரத்துக்கான வெளியேற்றத்திற்குப் பின் ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்தில் எஞ்சியுள்ளனர். 

வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெற்றிகொண்டதன் மூலம் சினேகன் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கான வெளியேற்றத்தின் மூலம் இருவர் வெளியேற்றப்பட உள்ளனர். மீதமிருக்கும் மூவர் இறுதிப் போட்டியில் சினேகனுடன் பங்கு கொள்வார்கள். சினேகன், கணேஷ், ஹரிஷ், ஆரவ், சுஜா மற்றும் பிந்து ஆகிய ஆறு போட்டியாளர்களே தற்போது போட்டியில் உள்ளனர்.



இறுதிப்போட்டி எப்போது நடைபெறும், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து அறிய மக்கள் மிக ஆர்வமாக உள்ளனர். தற்போது அது குறித்த சிறிய தகவலொன்று நம் கைக்குக் கிட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்த தினத்துடன் பார்க்கும் போது அக்டோபர் மூன்றாம் திகதி செவ்வாயன்று தான் இறுதிப்போட்டி நடைபெற வேண்டும். ஆனால் அக்டோபர் இரண்டாம் திகதி முதல் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் நேரமான இரவு ஒன்பது மணிக்கு 'தமிழ்க் கடவுள் முருகன்' என்னும் பக்தி நெடுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆகவே அக்டோபர் ஒன்றாம் திகதி பிக்பாஸ் இறுதிப்போட்டி நடைபெறும் என ஊகிக்க முடிகிறது. அப்படியானால் பிக்பாஸ் 98 நாட்களோடு முடிந்து விடுமா? அல்லது இரண்டு நாட்களுக்கான ஒளிப்பதிவுகளை கையில் வைத்துக் கொண்டு விஜய் தொலைக்காட்சி மக்களை ஏமாற்றுகிறதா? விடை பிக்பாஸுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் மட்டுமே தெரியும். கமலுக்கும் கூட தெரிந்திருக்கலாம்!

#BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO

17.09.2017 

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 12 - வெளியேறப்போவது யார்? #BiggBossTamil

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வார இறுதி நிகழ்ச்சிக்கான சனிக்கிழமை பகுதி ஒளிபரப்பாகி முடிந்துள்ளது. பன்னிரெண்டாம் வாரத்துக்கான வெளியேற்றத்துக்கான பட்டியலில் ஆரவ், சினேகன், வையாபுரி மற்றும் ஹரிஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுள் ஹரிஷ் சனிக்கிழமை அத்தியாயத்தில் காப்பாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகுதி மூலம் மீதமிருக்கும் மூவரில் வெளியேறப்போகும் 'அதிர்ஷ்டசாலி' யார் என்பது தெரிந்துவிடும்.



களத்தில் ஏழு பேர் உள்ளனர். இறுதிப் போட்டிக்கு நால்வர் தெரிவாக முடியும். இந்த வாரத்துடன் சேர்த்து இன்னும் மூன்று வாரங்கள் மீதமுள்ளன. ஆகவே கட்டாயம் மூவர் வெளியேறியே ஆகவேண்டும். ஆகவே போலியான வெளியேற்றங்கள் இனி இல்லை. மேலும் வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெல்லப் போகும் வெற்றியாளர் யார் என்பதும் இன்று அறிவிக்கப்படும். 

இந்த வாரத்துக்கான வெளியேற்றத்தில் மீதமுள்ள மூவரில் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளவர் வெளியேற்றப்படுவார். ஒருவேளை மிகக் குறைவான வாக்குகளைப் பெறுபவர் தங்கத் துருப்புச் சீட்டை வெல்லும் பட்சத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் நிச்சயம் வெளியேற்றபடுவார். முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!

#BiggBoss #BiggBossTamil #BigBrother #EndamolshineGroup #StarVijayTV #KamalHassan #Oviya #OviyaArmy #Oviyaa #Namitha #Julie #Google  #BiggBossVoteTamil #TN #VivoBiggBoss

17.09.2017 

Tuesday, September 12, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு யாருக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துள்ளது. இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ளன. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் சுவாரசியம் அதிகரித்துள்ளது. இறுதிக்கட்டப் போட்டிகள் மிகக் கடுமையாக இருக்கும் என பிக்பாஸ் எச்சரித்துள்ளார். தற்போது ஏழு உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டில் எஞ்சியுள்ளனர். ஆரம்பகட்ட போட்டியாளர்கள் நால்வரும் புதிய போட்டியாளர்கள் இருவரும் உள்ளனர். ஏழுபேரில் இருவர் பெண்களாவர்.

பிக்பாஸ் மாபெரும் இறுதிப்போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தேர்வாவதற்கான வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார். அதுதான் 'வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு ( Winning Golden Ticket )'. இதன் சிறப்பம்சம் என்னவெனில் இந்தத் துருப்புச் சீட்டை வெல்பவரை எதிர்வரும் வாரங்களில் வெளியேறுவதற்காக பரிந்துரை செய்யவோ வெளியேற்றவோ முடியாது. மாபெரும் இறுதிப்போட்டிக்கு நேரடித் தகுதியை இந்தத் துருப்புச் சீட்டு வழங்குகிறது.



இந்த பன்னிரெண்டாம் வாரம் முழுவதும் இதற்கான போட்டிகள் நடைபெறும். இதற்கான போட்டிகள் மிகக் கடுமையாக இருக்கும். பதினோராம் வாரத்தின் ஞாயிறு அத்தியாயத்தின் மூலம் கமல் இதற்கான போட்டியை ஆரம்பித்து வைத்தார். வெற்றிபெறும் நபருக்கு கமல் நேரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து 'வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை' வழங்குவார். இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தெரிவு பெறப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? இந்த வார இறுதியில் அறிந்து கொள்வோம். அதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியுடனும் சிகரம் இணையத்தளத்துடனும் இணைந்திருங்கள்.

#BiggBoss #BiggBossTamil #BigBrother #EndamolshineGroup #StarVijayTV #KamalHassan #Oviya #OviyaArmy #Oviyaa #Namitha #Julie #Google  #BiggBossVoteTamil #TN #VivoBiggBoss

12.09.2017 

Ads

Popular Posts