BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Monday, October 1, 2018

BIGG BOSS TAMIL 2 | TITLE WINNER RYTHVIKA | பிக் பாஸ் தமிழ் 2 | வெற்றியாளர் ரித்விகா

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் முடிவுக்கு வந்துள்ளது. 'நல்லவர் யார்? கெட்டவர் யார்?'என்னும் கேள்வியுடன் பிக் பாஸ் ஆரம்பமானது. 17.06.2018 முதல் 30.09.2018 வரை 105 நாட்கள் ஒளிபரப்பானது. 16 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக் பாஸ் போட்டியில் விஜயலட்சுமி மட்டும் இடைநடுவில் இணைந்துகொண்டார். 

முதலாம் பருவத்தில் மூன்று போட்டியாளர்கள் வரை தங்கள் சொந்த காரணத்துக்காக வெளியேறியிருந்தனர். மேலும் முதலாம் வாரம் முதலே மக்கள் வாக்குகளினால் வெளியேற்றமும் ஆரம்பமானது. இதன் காரணமாக இடைநடுவில் பல போட்டியாளர்களை இணைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. 




அதனால் இம்முறை முதலாம் வாரம் வெளியேற்றம் தவிர்க்கப்பட்டது. மேலும் போட்டியாளர்கள் தங்கள் சொந்த காரணத்துக்காக வெளியேற முற்படாததால் மேலதிகப் போட்டியாளர்களின் தேவை ஏற்படவில்லை. நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிப்பதற்காக விஜயலட்சுமி மட்டும் இடைநடுவில் இணைத்துக்கொள்ள்ளப்பட்டார். 

30.09.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் இறுதிப்போட்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 15ஆம் வார இறுதிப்போட்டிக்கு நால்வர் தெரிவாகியிருந்தனர். விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் ரித்விகா ஆகிய நால்வரே இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியிருந்தனர். 




சனிக்கிழமை அன்று ஜனனி வெளியேற்றப்பட்டார். ஜனனிக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது. ஜனனி கண்கள் கட்டப்பட்டு பிக் பாஸ் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். ஜனனி வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக 'நோட்டா' திரைப்பட கதாநாயகன் பிக் பாஸ் வெற்றிக்கிண்ணத்தை பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார். இறுதிப்போட்டியாளர்கள் நால்வரும் வெற்றிக்கிண்ணத்தை கைகளில் ஏந்தி அழகு பார்த்தனர்.

ஞாயிற்றுக்கிழமை முதலாவதாக விஜயலட்சுமி வெளியேற்றப்பட்டார். விஜயலட்சுமி மூன்றாம் இடத்தைப் பிடித்தார். பிக் பாஸ் இரண்டாம் பருவ போட்டியாளர்கள் அனைவரும் இறுதிப்போட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். விஜயலட்சுமியை முதலாம் பருவ வெற்றியாளரான ஆரவ் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றார். 

கமல் கடைசி இரு போட்டியாளர்களையும் இறுதிப்போட்டி மேடைக்கு அழைத்துச் செல்வதற்கு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். கமல் காப்பி போட்டு தானும் எடுத்துக்கொண்டு ஐஸ்வர்யாவுக்கும் ரித்விகாவுக்கும் வழங்கினார். கமல் இருவரையும் அழைத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விளக்குகள் ஒவ்வொன்றாய் அணைக்கப்பட்டன. பிக் பாஸ் வீடு தற்காலிகமாக அடுத்த பருவம் வரை இருளில் மூழ்கியது. 




பிக் பாஸ் மேடையில் ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் நின்றிருந்தனர். இந்த இறுதி வாரத்துக்கான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை நான்கு பேருக்குமாக மூன்று கோடியைத் தாண்டியுள்ளது என்று கமல் குறிப்பிட்டிருந்தார். 1.6 கோடி வாக்குகளைப் பெற்று ரித்விகா முதலிடத்தைப் பெற்றார். 

ரித்விகாவுக்கு வெற்றிக்கிண்ணமும் 50 இலட்ச ரூபா பணமும் வழங்கப்பட்டது. ஜனனிக்கும் விஜிக்கும் VIVO V 11 PRO திறன்பேசி பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சில விருதுகளையும் பிக் பாஸ் சார்பாக கமல் வழங்கி வைத்தார். 

சிறந்த வீட்டு தலைவர் - நித்யா 
சிறந்த காலை நேர நடனம் - யாஷிகா 
சிறந்த போட்டியாளர் - யாஷிகா 
சிறந்த சமையல் கலைஞர் - டேனியல் 
சிறந்த ஆடை அலங்காரம் - விஜயலட்சுமி 
சிறந்த தூய்மையாளர் - மும்தாஜ் 
சிறந்த நகைச்சுவையாளர் - பாலாஜி 

பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கு முதலாம் பருவத்தில் உலகப் புகழ் பெற்ற ஓவியா கலந்துகொண்டார். 

105 நாட்கள் நம் இல்லங்களையெல்லாம் ஆக்கிரமித்திருந்த பிக் பாஸுக்கு தற்காலிக ஓய்வு. அடுத்த வருடம் இதே நேரத்தில் மூன்றாம் பருவத்தில் மீண்டும் பிக் பாஸோடு இணைந்து கொள்வோம். 

வெற்றியாளர் ரித்விகாவுக்கு பிக் பாஸ் தமிழ் ரசிகர்கள் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

BIGG BOSS TAMIL 2 | TITLE WINNER RYTHVIKA | பிக் பாஸ் தமிழ் 2 | வெற்றியாளர் ரித்விகா  
http://sigarambiggboss.blogspot.com/2018/10/bigg-boss-tamil-2-title-winner-rythvika.html 
#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO 

No comments:

Post a Comment

Ads

Popular Posts