BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Thursday, October 5, 2017

பிக் பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆரவ்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஜூன் 25, 2017 இல் துவங்கி செப்டெம்பர் 30, 2017 இல் முடிவுக்கு வந்திருக்கிறது. 98 நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஸ்டார் விஜய் இந்த மெய்நிகர் நிகழ்ச்சித் தொடரினை வெற்றிகரமாக ஒளிபரப்பாக்கியது.
    
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதே சில போட்டியாளர்கள் பிக்பாஸில் பங்குபற்றவும் பல பார்வையாளர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கவும் காரணமாக அமைந்திருந்தது.

பிக்பாஸ் தமிழ் மாபெரும் இறுதிப்போட்டி செப்டெம்பர் 30, 2017 இல் கோலாகலமாக இடம்பெற்றது. இறுதிநாள் நிகழ்ச்சியில் நமீதா மற்றும் ஸ்ரீ ஆகியோரைத் தவிர ஏனைய 17 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். நடனக் கலைஞர் சாண்டியின் நடனத்துடன் துவங்கியது இறுதிப்போட்டி. 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆரவ் முதலிடத்தைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சினேகன் இரண்டாம் இடத்தையும் ஹரிஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைக் கைப்பற்றினர். பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் விவோ ( Vivo ) திறன்பேசி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

30 ஒளிப்பதிவுக் கருவிகள், 100 நாட்கள் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலித்த பிக்பாஸ் தமிழ் முதலாம் பருவம் இத்தோடு முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த வருடமளவில் இரண்டாம் பருவத்தை எதிர்பார்க்கலாம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

05.10.2017 

Saturday, September 30, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார் பிந்து!

பிக்பாஸ் தமிழ் - பருவம் 01 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி செப் 30 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனிடையே அக்டோபர் முதலாம் திகதி பிக்பாஸ் ஹிந்தி - பருவம் 11 துவங்கவுள்ளது. இதன் காரணமாகத்தான் பிக்பாஸ் தமிழ் மூன்று நாட்கள் முன்னதாக முடிக்கப்படுகிறதா என்னும் கேள்வி எழுகிறது.

பிக்பாஸ் இறுதி வாரத்துக்குள் ஐந்து போட்டியாளர்கள் கால் பதித்தனர். சினேகன், கணேஷ், ஆரவ், ஹரிஷ் மற்றும் பிந்து ஆகியோரே அந்த ஐந்து போட்டியாளர்கள் ஆவர். இறுதிப்போட்டிக்கு நால்வர் மட்டுமே தெரிவாக முடியும் என்னும் நிலையில் வாரத்தின் இடை நடுவில் ஒருவர் வெளியேறுவார் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

வழமையாக மக்கள் வாக்குகளால் வெளியேறுபவர் கமல் முன்னிலையிலேயே வெளியேறுவார். போட்டியாளர்களும் சனிக்கிழமையன்றே வெளியேற்றம் நிகழும் எனக் கருதினார்கள்.

ஆனால் வித்தியாசமாக யோசித்த பிக்பாஸ் நள்ளிரவு ஒரு மணிக்கு பிந்துவை வெளியேற்றினார். கண்ணீருடன் விடைபெற்றார் பிந்து. போட்டியாளர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள வெகு நேரமானது. புதன்கிழமை அத்தியாயத்தில் வெளியேறினார் பிந்து மாதவி!

சனிக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்கு சினேகன், கணேஷ், ஆரவ் மற்றும் ஹரிஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். வெற்றியாளர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! 

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

30.09.2017 

Tuesday, September 26, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்பு!

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறியோர்: 

01. ஓவியா 
02. பரணி 
03. ஸ்ரீ 

மக்கள் வாக்குகளின் மூலம் வெளியேற்றப் பட்டோர் : 

04. ஜூலி 
05. சக்தி 
06. நமீதா 
07. ஆர்த்தி 
08. கஞ்சா கருப்பு 
09. அனுயா 
10. காயத்ரி
11. ரைசா
12. காஜல்
13. வையாபுரி  
14. சுஜா 
          
முதல் கட்ட போட்டியாளர்களில் இன்னும் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள்:

15. சினேகன்
16. கணேஷ்  
17. ஆரவ் 

புது வரவுகள்:
   
18. ஹரிஷ்
19. பிந்து மாதவி

பிக்பாஸ் விருந்தினர்களாக வந்தவர்கள் :

(11ஆம் வாரம் வெளியேறினர்)

* ஜூலி

* ஆர்த்தி
* சக்தி

(இவர்கள் மூவருமே மக்கள் வாக்குகளால் வெளியேற்றப்பட்டவர்கள். ஆனால் பிக்பாஸ் விருந்தினர்களாக மட்டும் வீட்டில் இருந்தனர்)

வாரம் 14 - வெற்றிக்கான போட்டியாளர்கள் :
#ஆரவ் 
#கணேஷ் 
#பிந்து
#ஹரிஷ்
#சினேகன் 

//

வாக்களிப்பு முறை:

# பிக்பாஸ் வாக்களிப்புக்கு இங்கே சொடுக்கவும்: 'பிக்பாஸ் தமிழ் - வாக்களிப்பு' 'BIGG BOSS TAMIL VOTE'
  
அல்லது 
  
''BIGG BOSS TAMIL VOTE' அல்லது ''BIGG BOSS VOTE' என கூகுளில் தேடுங்கள்.
  
ஒரு வாக்காளருக்கு ஒரு நாளைக்கு ஐம்பது வாக்குகள் வழங்கப்படும். 

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வாக்களிக்க முடியாது.
   
இந்திய பார்வையாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். 

இந்தியாவுக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள் https://www.google.co.in முகவரிக்கு சென்று வாக்களிக்க முடியும்.

# தவறிய அழைப்பு முறையில் ( Missed Call ) வாக்களிக்கலாம்.

இதில் இந்திய வாக்காளர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். ஒரு வாக்காளருக்கு பத்து வாக்குகள் மட்டுமே வழங்கப்படும்.

அழைப்பு இலக்கங்கள் ( வாரம் 14 )

ஆரவ்            : 7210122301
கணேஷ்       : 7210122304
பிந்து             : 7210122316
ஹரிஷ்         : 7210122318
சினேகன்      : 7210122313

முக்கிய குறிப்பு : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. ஆகவே இனி நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வெற்றியாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்காகும். ஆகவே நன்கு சிந்தித்து தகுதியானவருக்கு வாக்களியுங்கள்!

வாரத்தின் அடிப்படையில் வெளியேறியோர் பட்டியல் :

வாரம் 01 - ஸ்ரீ ( தானாக வெளியேறினார்) 
                      அனுயா 
வாரம் 02 - கஞ்சா கருப்பு 
                      பரணி ( தானாக வெளியேறினார்)
வாரம் 03 - ஆர்த்தி 
வாரம் 04 - நமீதா 
வாரம் 05 - வெளியேற்றம் இல்லை 
வாரம் 06 - ஜூலி 
                      ஓவியா ( தானாக வெளியேறினார்)
வாரம் 07 - சக்தி 
வாரம் 08 - காயத்ரி 
வாரம் 09 - ரைசா
வாரம் 10 - காஜல்
வாரம் 11 - வெளியேற்றம் இல்லை ( சுஜா போலியாக வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார் )
வாரம் 12 - வையாபுரி
வாரம் 13 - சுஜா 
வாரம் 14 - ???
வாரம் 15 - வெற்றியாளர்

வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இன்றி விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் வசித்து வரும் போட்டியாளர்களில் மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்? சனிக்கிழமை செப்டெம்பர் 30 அன்று மக்கள் தீர்ப்பு வெளியாகும். அதுவரை நாமும் அவர்களைப் பற்றி புறம் பேசுவோம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO

26.09.2017 

பிக் பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு செய்ய வாக்களியுங்கள் - BIGG-BOSS-TAMIL-VOTE-FOR-WINNER!

பிக்பாஸ் தமிழ் - பருவம் 01 ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25,2017 இல் ஒளிபரப்பாகத் துவங்கியது. பதினான்காம் வாரமான இவ்வாரத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறவுள்ளது. செப்டெம்பர் 30 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு மாபெரும் இறுதிப்போட்டி ஒளிபரப்பாகவுள்ளது. 
 
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 15 போட்டியாளர்கள் களமிறங்கினர். நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்கள் கடந்த பின்னர் மேலும் 04 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். பதினான்காம் வாரத்தில் பிக்பாஸ் இல்லத்தில் 05 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இவ்வார நடுப்பகுதியில் வெளியேற்றப்படுவார். இறுதிப்போட்டிக்கு நால்வர் மட்டுமே தகுதி பெறுவர்.
 
கவிஞர் சினேகன் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தெரிவாகியுள்ளார். ஆனால் அவரே வெற்றியாளர் அல்ல. மக்களின் வாக்குகள் யாருக்கு அதிகமாக உள்ளதோ அவரே பிக்பாஸ் பட்டத்தை வெல்லும் அதிர்ஷ்டசாலி ஆவார். தற்போது பிக்பாஸ் இல்லத்தில் சினேகனுடன் கணேஷ், ஆரவ், ஹரிஷ் மற்றும் பிந்து ஆகியோர் உள்ளனர். 

பல்வேறு இணையத்தளங்களில் வாக்களிப்புகள் நடத்தப்பட்டாலும் கூகிளின் மூலம் நீங்கள் நேரடியாக அளிக்கும் வாக்கு மட்டுமே வெற்றியாளரைத் தீர்மானிக்கும். ஆகவே போலிகளைக் கண்டு ஏமாறாமல் உண்மையை சரிபார்த்து வாக்களியுங்கள்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி பிக்பாஸ் இல்லத்தை விட்டுப் பிரிவது மனதுக்கு கஷ்டமாகவே இருக்கும். ஆனால் எதற்கும் முடிவு உண்டல்லவா? உங்கள் வாக்களிப்பை ஆரம்பித்து விட்டீர்களா? உங்கள் அபிமான வெற்றியாளர் யார்? முடிவு சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு. காணத்தவறாதீர்கள்! 

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO  

26.09.2017 

Sunday, September 24, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளியே! #BiggBossTamil

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி செப்டெம்பர் 24 ஆம் திகதியோடு நிறைவுபெற்றுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிறைவு பெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. 

பிக் பாஸ் இல்லத்தின் 13 ஆம் வாரத்துக்கான வெளியேற்றத்தில் சினேகன் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தேர்வான காரணத்தால் அவரைத் தவிர மற்ற ஐந்து பேரும் பிக்பாஸினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஐந்து பேரில் கணேஷ் மற்றும் சுஜா ஆகியோர் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தனர். சினேகன் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வான காரணத்தால் பதின்மூன்றாம் வாரத்தின் இறுதிப் போட்டிக்கான சவால்களின் மூலம் தான் பெற்ற மதிப்பெண்களைக் கொடுத்து சுஜா மற்றும் கணேஷ் ஆகிய இருவரில் ஒருவரைக் காப்பாற்றலாம் என கமல் அறிவித்திருந்தார்.

பல கலந்துரையாடல்களுக்குப் பின் சினேகன் கணேஷைக் காப்பாற்றுவதாக கமலிடம் தனது முடிவை அறிவித்தார். ஏற்கனவே போலியாக வெளியேற்றப்பட்டிருந்ததாலும் பதின்மூன்றாம் வாரத்தின் சவால்களில் கடுமையாக நடந்து கொண்டதாலும் சுஜாவின் பிரிவு யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை.

பிக்பாஸ் மேடையில் காயத்ரிக்கு வழங்கப்பட்டது போல சுஜாவைக் கேள்வி கேட்கும் வாய்ப்பையும் மக்களுக்கு வழங்கினார் கமல். கண்ணீருடன் விடைபெற்றார் சுஜா.

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

24.09.2017 

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
  
விதிமுறைகள்:
  
* காலை கண்விழிக்கும் பாடலுக்கு எல்லோரும் ஆட வேண்டும்! மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
  
* பகலில் தூங்கவோ கட்டிலில் படுக்கவோ கூடாது. மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
  
* ஒலிவாங்கியை கழற்றுவதோ போட மறுப்பதோ குற்றம். மீறினால் பத்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
  
* போட்டிகளுக்கு தயாராக தாமதமானால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும். 

இந்தப் போட்டிகளில் ஒவ்வொருவரும் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்கள் வருமாறு :

90 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 06 ) :

சுஜா - 63

சினேகன் - 53
கணேஷ் - 52
பிந்து - 45
ஹரிஷ் - 40
ஆரவ் - 37 

89 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 05 ) : 

சுஜா - 58
கணேஷ் - 52
சினேகன் - 48
பிந்து - 40
ஆரவ் - 37
ஹரிஷ் - 23

86 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 02 ) :
  
ஆரவ் - 20
சுஜா - 18
சினேகன் - 15
கணேஷ் - 14
பிந்து - 10
ஹரிஷ் - 08

85 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 01 ) :
  
கணேஷ் - 04
சுஜா - 03
ஹரிஷ் - 03
  
#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

பிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable

24.09.2017 

Saturday, September 23, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 13 - நாள் 89 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable #BiggBossTamilUpdate

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

விதிமுறைகள்:

* காலை கண்விழிக்கும் பாடலுக்கு எல்லோரும் ஆட வேண்டும்! மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.

* பகலில் தூங்கவோ கட்டிலில் படுக்கவோ கூடாது. மீறினால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.

* ஒலிவாங்கியை கழற்றுவதோ போட மறுப்பதோ குற்றம். மீறினால் பத்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.

* போட்டிகளுக்கு தயாராக தாமதமானால் ஐந்து புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.
 
இந்தப் போட்டிகளில் ஒவ்வொருவரும் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்கள் வருமாறு :

89 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 05 ) :

சுஜா - 58
கணேஷ் - 52
சினேகன் - 48
பிந்து - 40
ஆரவ் - 37
ஹரிஷ் - 23

86 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 02 ) :

ஆரவ் - 20
சுஜா - 18
சினேகன் - 15
கணேஷ் - 14
பிந்து - 10
ஹரிஷ் - 08

85 ஆம் நாள் முடிவில் மதிப்பெண்கள் ( நாள் 01 ) :

கணேஷ் - 04
சுஜா - 03
ஹரிஷ் - 03 

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO 

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 13 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable 

23.09.2017 

Ads

Popular Posts