Wednesday, May 22, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸ் துவங்கும் தேதி வெளியானது!| கட்டுரை | வெப்துனியா தமிழ்

பிக்பாஸ் 3 சீசன் துவங்கும் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. 

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  



ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது. 

  இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 

அந்தவகையில் இதற்கு முன்னதாக இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரமேஷ் திலக், சுதா சந்திரன், லைலா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அதை மூவருமே மறுத்தனர். அதேவேளையில் நடிகை சாந்தினி தமிழரசன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்திருந்தார். 


சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டது. 

மேலும் அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றினார். நேற்று இந்நிகழ்ச்சியில் ஓகே ஓகே பட புகழ் ஜாங்கிரி மதுமிதா உறுதி செய்யப்பட்டுள்ளார். 


இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் ஜூன் 23 ஆம் தேதி துவங்க இருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 


நன்றி : வெப்துனியா தமிழ் 
இணைப்பு : https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/the-release-date-of-big-boss-3-season-119052100018_1.html 



பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸ் துவங்கும் தேதி வெளியானது!  | கட்டுரை | வெப்துனியா தமிழ் 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #KamalHassan #Oviya #BBTamil3 #BB3 #BiggBoss3 #BiggBossContestants #BiggBossOpening #BBJune

Sunday, May 19, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | PROMO - 02







பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | PROMO - 02

#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #KamalHassan #Oviya #BBTamil3 #BB3 #BiggBoss3 #BiggBossContestants #BiggBossOpening #BBJune

Saturday, May 18, 2019

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா? | கட்டுரை | ஆனந்த விகடன்

கமல்ஹாசனின் ப்ரமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பிக் பாஸ் மூன்றாவது சீசனில் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளரை உறுதி செய்திருக்கிறது சேனல்.



அந்தப் போட்டியாளர் 'ஓ.கே. ஓ.கே.' படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா. சின்னத்திரையில் `சின்ன பாப்பா பெரிய பாப்பா'வில் காமெடி செய்தவர்.

சில மாதங்களுக்கு முன்புதான் சிவபக்தையான இவர், மதங்களைக் கடந்து, தனது உறவினரும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துகொண்டார்.



'மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு’ என்றால், "அவங்களுக்குச் சவால்னா ரொம்ப பிடிச்ச விஷயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க'' என்கின்றனர் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.



முதல் இரண்டு சீசன்களிலும் கூட இவர் அழைக்கப்பட்டதாகவும் பல்வேறு காரணங்களால் அப்போது கலந்துகொள்ளவில்லை என்றும் அப்போது பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

நன்றி : ஆனந்த விகடன் 


பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா? | கட்டுரை | ஆனந்த விகடன்  
https://sigarambiggboss.blogspot.com/2019/05/who-is-first-contestant-to-enter-bigg-boss-tamil-3.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #KamalHassan #Oviya #BBTamil3 #BB3 #BiggBoss3 #BiggBossContestants #BiggBossOpening #BBJune 

Thursday, May 16, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | PROMO - 01







பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | PROMO - 01 
https://sigarambiggboss.blogspot.com/2019/05/bigg-boss-tamil-season-3-first-promo.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossPromo

Tuesday, May 14, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 03 | போட்டியாளர்கள் யார், யார்?

உங்கள் அபிமான பிக் பாஸ் தமிழின் மூன்றாம் பருவம் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

முதல் இரண்டு பருவங்களைப் போலவே இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். அதனை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. 

இப்போது போட்டியாளர்கள் யார் யார் என்கிற ஊகங்கள் வெளியாகி வருகின்றன. 



அந்த ஊகங்களில் பெயர்கள் அடிபடுபவர்கள் சிலர் பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர். சிலர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். 

எனினும் பிக் பாஸ் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பின் போதே இவற்றை உறுதி செய்துகொள்ள முடியும். 

'வெப்துனியா தமிழ்' என்னும் இணையத்தளம் பிக் பாஸ் மூன்றாம் பருவத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களின் உத்தேசப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அந்தப் பட்டியல் இதோ உங்களுக்காக: 

1 )  டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி
 2 )  நடிகை சாந்தினி
 3)   நடிகை கஸ்தூரி
 4)   நடிகை விசித்ரா
 5)   நடிகர் ராதாரவி
 6)   வி ஜே ரம்யா
 7)   நடிகை பூனம் பஜ்வா
 8)   நடிகர் ரமேஷ் திலக் 
9) மாடல் பாலாஜி
10)  நடிகர் பிரேம்ஜி
11)  நடிகை மதுமிதா
12)  நடிகர் ஸ்ரீமந்த்
13)  நடிகர் சந்தானபாரதி
14)  பாடகர் கிருஷ் 

இந்த பட்டியல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? மாற்றங்களை விரும்புகிறீர்களா? உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 03 | போட்டியாளர்கள் யார், யார்? 
https://sigarambiggboss.blogspot.com/2019/05/road-to-bigg-boss-tamil-3-contestants-list.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya 

பிக்பாஸ் 3 : ஆடுபுலி ஆட்டம் எப்போது முடியுமோ? | கட்டுரை | IndianExpress தமிழ்

கமல் மீண்டும் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்கிறார், அவர் பங்கேற்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் தொடர்ந்து வெளியானவண்ணமே உள்ளது. ஆனால், இப்போது வரை, போட்டியாளர்கள் யாரையும் உறுதி செய்யவில்லை என்ற தகவலே மெய் என்கிறது பிக்பாஸ் டீம்.

கமல் 2017ம் ஆண்டு தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி, இரவு 9 மணியானால், மக்களை வீட்டில் கட்டிப்போட்ட நிகழ்ச்சி என்று சொன்னால் தகும். அந்தளவிற்கு மக்களிடையே அந்த நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த சீசனின் வின்னராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



2018- பிக்பாஸ் 2வது சீசனையும் கமலே தொகுத்து வழங்கினார். இந்த சீசனில், நடிகர் மட்டுமல்லாது, அரசியல் கட்சி தலைவராகவும் வளர்ச்சி அடைந்திருந்தார். முதல் சீசனை போன்று, இரண்டாவது சீசன் அவ்வளவு சுவாரசியமாக இல்லாத நிலையில், கமலின் அரசியல் தெறிக்கும் பஞ்ச் வசனங்களுக்காக, வார இறுதியில் ஒளிபரப்பாகும் எபிசோடிற்காக மக்கள் டிவி முன் காத்துக்கிடந்தனர். அவரும் மக்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு வாரமும் பூர்த்தி செய்தார். அந்த சீசனின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியன் 2 படத்தை, கமல் துவக்கினார். அவருடைய மக்கள்நீதிமய்யம் கட்சியும் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் என பிசியாயின. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை, நடிகை நயன்தாரா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. அந்த செய்திக்கு விட்டில் பூச்சியின் ஆயுள்தான் போல….

பிக்பாஸ் 3 சீசனையும், நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளதாகவும், அதற்கான புரோமோ ஷூட் நிகழ்ச்சி, ஈஞ்சம்பாக்கம் ஸ்டூடியோவில் துவங்கி நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி, ஜூன் மாதம் 2வது வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த செய்தி தான் தற்போது ஊடகங்களில் வெளியாகிவருகிறது.

இந்த பரபர செய்தியில் புதிதாக இணைந்துள்ளவர் நடிகை லைலா. வெள்ளித்திரையில் இருந்து விலகிய பின்னர், சின்னத்திரையில் லைலா அவ்வப்போது தலைகாட்டிவந்தார்.இதனிடையே, பிக்பாஸ் 3 சீசன் ஸ்டூடியோவிற்கு சமீபத்தில் லைலா வந்திருந்தார். இதனையடுத்து, அவர் இந்த சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவின. லைலா, இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதேபோல், நடிகர் ரமேஷ் திலக் பங்கேற்க உள்ளதாக வந்த செய்திக்கு அவரும் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
சித்து +2 அட்டெம்ப்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சாந்தினி, பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் 3 சீசனின் புரோமோ வெளியானபிறகு தான், அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த இறுதிவிபரங்கள் தெரியவரும். அதுவரை, அவர், இவர், இவர், அவர் என்ற ஆடுபுலி ஆட்டம் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்!!! 

நன்றி : IndianExpress தமிழ் 


பிக்பாஸ் 3 : ஆடுபுலி ஆட்டம் எப்போது முடியுமோ? | கட்டுரை | IndianExpress தமிழ் 
https://sigarambiggboss.blogspot.com/2019/05/bb-tamil-3-who-anchor-who-contest-confusion.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  

பிக் பாஸ் 3-இல் பங்கேற்கிறேனா? - அஜித் பட நடிகை அதிரடி விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவல் தொடர்பாக நடிகை லைலா விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இந்த ஆண்டும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

இதற்கான ப்ரமோ வீடியோக்கள் எடுக்கும் பணியில் நிகழ்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வி இப்போதே பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Image credit: Google/ Behind talkies


நடிகைகள் சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் ரமேஷ் திலக் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை நடிகர் ரமேஷ் திலக் மறுத்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக வந்து கொண்டிருக்கும் செய்தி வதந்தி என்றும் அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியுள்ளார்.

அதேபோல் நடிகை லைலாவும் பிக்பாஸ் 3-ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு தனது சமூகவலைதள பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகை லைலா, “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார். 

Post on Instagram

How cheap can people get for publicity? Please note that I AM NOT A PART OF BIG BOSS Why is @v4mediaofficial Spreading fake news? #disclaimer #laila #tamilactress #fakenews #donotbelievethelies #donotbelieverumours #bigboss #tamilbigboss #iamnotaparticipant

A post shared by Laila Official (@laila_laughs) on May 9, 2019 at 3:10am PDT

நன்றி: News 18 தமிழ் 


பிக் பாஸ் 3-இல் பங்கேற்கிறேனா? - அஜித் பட நடிகை அதிரடி விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ் 
https://sigarambiggboss.blogspot.com/2019/05/am-i-participate-in-bb-tamil-3-laila.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya 

பிக் பாஸ் 3-இல் நான் இல்லை - பிரபல நடிகர் விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவல் தொடர்பாக விளக்கமளித்துள்ளார் நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்.

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இந்த ஆண்டும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.



இதற்கான புரமோ வீடியோக்கள் எடுக்கும் பணியில் நிகழ்ச்சிக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வியை இப்போதே பார்வையாளர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

நடிகைகள் சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாஜ கூறப்பட்ட நிலையில் தற்போது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் ரமேஷ் திலக் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை நடிகர் ரமேஷ் திலக் மறுத்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக வந்து கொண்டிருக்கும் செய்தி வதந்தி என்றும் அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியுள்ளார். 

நன்றி : News 18 தமிழ் 


பிக் பாஸ் 3-இல் நான் இல்லை - பிரபல நடிகர் விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ் https://sigarambiggboss.blogspot.com/2019/05/bigg-boss-tamil-season-3-actor-ramesh-thilak-statement.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya 

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்

பிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். 




நன்றி: வெப்துனியா தமிழ் 


பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ் 
https://newsigaram.blogspot.com/2019/05/bigg-boss-tamil-3-kamal-hassan-condition-for-shooting.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya 

Thursday, May 9, 2019

பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் | கட்டுரை | சமயம் செய்திகள்

தனியார் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 3 சீசன் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதில், ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2ஆவது சீசன் அப்படியில்லை. ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். 



இந்த நிலையில், 3ஆவது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கமல் ஹாசன் அதற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டு பிஸியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதிலிருந்து இந்த சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கயிருப்பதாக தெளிவாகியுள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், முதல் 3 போட்டியாளர்கள் பற்றிய புதிய தகவலும் வெளியாகியுள்ளது. 

அதன்படி, நடிகை லைலா, சாந்தினி தமிழரசன், சுதா சந்திரன் ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி : சமயம் செய்திகள் 


பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் | கட்டுரை | சமயம் செய்திகள்  
https://sigarambiggboss.blogspot.com/2019/05/kamal-hassan-busy-with-bigg-boss-tamil-3-shooting.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  

தொடங்கிவிட்டது `பிக் பாஸ்' சீஸன் 3 - பிரமாண்ட செட்டில் கமல்ஹாசன் ஷூட் | கட்டுரை | ஆனந்த விகடன்

தமிழ்த் தொலைக்காட்சி உலகில் 2017-ல் அறிமுகமாகி பலத்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’. புதிய பரிமாணத்தில் ஆங்கராக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் கமல்ஹாசன். 

இரவு 9 மணியானால் ஊரே டிவி முன் உட்கார்ந்து, முற்றிலும் தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள் பிரபலங்கள் பேசும் புறணியைக் கேட்கத் தொடங்கியதில், ஷோ செம ஹிட். ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட, சேனலின் டி.ஆர்-பியும் எங்கேயோ போனது.



அடுத்து சீஸன் 2 ஆரம்பித்தது.

’ஷோ குறித்த அறிமுகம் இல்லாத ஒரு எதிர்பார்ப்பில்தான் முதல் சீஸன் ஹிட் ஆனது; இரண்டாவது சீஸன் அப்படியிருக்காது’ எனப் பேசினார்கள். ஆனால், அந்தப் பேச்சுக்களைப் பொய்த்துப் போக வைத்து இந்த முறையும் அதே வரவேற்பு. இம்முறை கூடுதலான ஒரு விஷயம் என்னவெனில், நடிகர் கமல் அரசியல்வாதியாகியிருந்தார். 

எனவே, அவரது அரசியல் நக்கல், நையாண்டிகளை வார இறுதி எபிசோடுகளில் பார்க்க முடிந்தது. ஓர் உதாரணம்: பிக் பாஸ் வீட்டுக்குள் அமைக்கப்பட்ட சிறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ’வெளியில் உள்ள சிறைச்சாலைகளைப்போல் வசதி வாய்ப்புகளெல்லாம் இல்லை’ என சசிகலாவின் ’பெங்களூரு சிறை வசதி சர்ச்சை’யைச் சீண்டினார்.

இரண்டாவது சீஸனுக்கு ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், மஹத், யாஷிகா ஆனந்த் என இளம் பட்டாளங்களால் கூடுதல் கிளாமர் லுக்கும் கணவன் மனைவியான `தாடி’ பாலாஜி - நித்யாவால் பரபரப்பும் அதிகம் கிடைத்தது. இறுதியில் ரித்விகா டைட்டில் வென்றார். 

இதோ பிக் பாஸ் சீஸன் 3-ம் தொடங்கிவிட்டது. 

மூன்றாவது சீஸனுக்கான புரொமோ ஷூட் இன்று (08) தொடங்கியது. சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அதே பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில், கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகள் தற்போது ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.

இம்முறை கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன. அடுத்த சில நாள்களில் புரொமோ வீடியோ சேனலில் ஒளிபரப்பாகலாமெனத் தெரிகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்க இருக்கிறது.

முதல் சீஸனில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற கமல் அடுத்த சீஸனில் ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்றார்.

தன்னுடைய அரசியல் முயற்சிக்கான பலன் தேர்தல் முடிவுகள் மூலம் அடுத்த சில தினங்களில் தெரிய இருக்கிற சூழலில் பிக் பாஸ் சீஸன் 3-ல் கமல் என்ன சொல்வார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 
தொடங்கிவிட்டது `பிக் பாஸ்' சீஸன் 3 - பிரமாண்ட செட்டில் கமல்ஹாசன் ஷூட் | கட்டுரை | ஆனந்த விகடன்  
https://sigarambiggboss.blogspot.com/2019/05/bigg-boss-tamil-3-shooting-start.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 3'

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 1’, ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி இரண்டையுமே கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். 

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘பிக் பாஸ் 3’ விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

இதனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான புரமோஷன் படப்பிடிப்பில் தற்போது கமல் கலந்து கொண்டார். 

Image Credit: Google


‘பிக் பாஸ்’ 1 மற்றும் 2, போலவே ‘பிக் பாஸ்’ 3 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. 

இருப்பினும் அரசியல் மற்றும் 'இந்தியன் 2' பணிகளுக்கு இடையே அவர் இதில் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்தது. 

ஆனால் 'இந்தியன் 2' திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்­டதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் தேர்தல் பணிகளும் முடிந்துவிட்டன என்பதால் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றே கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது பூந்தமல்லி அருகேயுள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சிக்கான புரமோஷன் படப்­பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்­டார். 

விரைவில் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகும் என்றும், ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி ஜூனில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.  

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 3' 
https://sigarambiggboss.blogspot.com/2019/05/bigg-boss-tamil-3-starts-with-kamal-in-june-on-vijay-tv.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya