Tuesday, May 14, 2019

பிக்பாஸ் 3 : ஆடுபுலி ஆட்டம் எப்போது முடியுமோ? | கட்டுரை | IndianExpress தமிழ்

கமல் மீண்டும் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்கிறார், அவர் பங்கேற்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் தொடர்ந்து வெளியானவண்ணமே உள்ளது. ஆனால், இப்போது வரை, போட்டியாளர்கள் யாரையும் உறுதி செய்யவில்லை என்ற தகவலே மெய் என்கிறது பிக்பாஸ் டீம்.

கமல் 2017ம் ஆண்டு தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி, இரவு 9 மணியானால், மக்களை வீட்டில் கட்டிப்போட்ட நிகழ்ச்சி என்று சொன்னால் தகும். அந்தளவிற்கு மக்களிடையே அந்த நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த சீசனின் வின்னராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



2018- பிக்பாஸ் 2வது சீசனையும் கமலே தொகுத்து வழங்கினார். இந்த சீசனில், நடிகர் மட்டுமல்லாது, அரசியல் கட்சி தலைவராகவும் வளர்ச்சி அடைந்திருந்தார். முதல் சீசனை போன்று, இரண்டாவது சீசன் அவ்வளவு சுவாரசியமாக இல்லாத நிலையில், கமலின் அரசியல் தெறிக்கும் பஞ்ச் வசனங்களுக்காக, வார இறுதியில் ஒளிபரப்பாகும் எபிசோடிற்காக மக்கள் டிவி முன் காத்துக்கிடந்தனர். அவரும் மக்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு வாரமும் பூர்த்தி செய்தார். அந்த சீசனின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியன் 2 படத்தை, கமல் துவக்கினார். அவருடைய மக்கள்நீதிமய்யம் கட்சியும் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் என பிசியாயின. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை, நடிகை நயன்தாரா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. அந்த செய்திக்கு விட்டில் பூச்சியின் ஆயுள்தான் போல….

பிக்பாஸ் 3 சீசனையும், நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளதாகவும், அதற்கான புரோமோ ஷூட் நிகழ்ச்சி, ஈஞ்சம்பாக்கம் ஸ்டூடியோவில் துவங்கி நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி, ஜூன் மாதம் 2வது வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த செய்தி தான் தற்போது ஊடகங்களில் வெளியாகிவருகிறது.

இந்த பரபர செய்தியில் புதிதாக இணைந்துள்ளவர் நடிகை லைலா. வெள்ளித்திரையில் இருந்து விலகிய பின்னர், சின்னத்திரையில் லைலா அவ்வப்போது தலைகாட்டிவந்தார்.இதனிடையே, பிக்பாஸ் 3 சீசன் ஸ்டூடியோவிற்கு சமீபத்தில் லைலா வந்திருந்தார். இதனையடுத்து, அவர் இந்த சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவின. லைலா, இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதேபோல், நடிகர் ரமேஷ் திலக் பங்கேற்க உள்ளதாக வந்த செய்திக்கு அவரும் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
சித்து +2 அட்டெம்ப்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சாந்தினி, பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் 3 சீசனின் புரோமோ வெளியானபிறகு தான், அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த இறுதிவிபரங்கள் தெரியவரும். அதுவரை, அவர், இவர், இவர், அவர் என்ற ஆடுபுலி ஆட்டம் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்!!! 

நன்றி : IndianExpress தமிழ் 


பிக்பாஸ் 3 : ஆடுபுலி ஆட்டம் எப்போது முடியுமோ? | கட்டுரை | IndianExpress தமிழ் 
https://sigarambiggboss.blogspot.com/2019/05/bb-tamil-3-who-anchor-who-contest-confusion.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  

No comments:

Post a Comment