Thursday, May 9, 2019

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 3'

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 1’, ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி இரண்டையுமே கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். 

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘பிக் பாஸ் 3’ விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

இதனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான புரமோஷன் படப்பிடிப்பில் தற்போது கமல் கலந்து கொண்டார். 

Image Credit: Google


‘பிக் பாஸ்’ 1 மற்றும் 2, போலவே ‘பிக் பாஸ்’ 3 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. 

இருப்பினும் அரசியல் மற்றும் 'இந்தியன் 2' பணிகளுக்கு இடையே அவர் இதில் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்தது. 

ஆனால் 'இந்தியன் 2' திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்­டதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் தேர்தல் பணிகளும் முடிந்துவிட்டன என்பதால் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றே கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது பூந்தமல்லி அருகேயுள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சிக்கான புரமோஷன் படப்­பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்­டார். 

விரைவில் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகும் என்றும், ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சி ஜூனில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.  

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 3' 
https://sigarambiggboss.blogspot.com/2019/05/bigg-boss-tamil-3-starts-with-kamal-in-june-on-vijay-tv.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya 

No comments:

Post a Comment