Monday, August 27, 2018

BB TAMIL 2 | WEEK 11 | DAY 71 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 11 | நாள் 71 | எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

லா லா ல ல லா லா ல லா..... 

என்ன மச்சி பாட்டோட வர்ற? 

ஆமா மச்சி, நேத்து வரைக்கும் ஏன் இன்னிக்கு மாலை வரைக்கும் எலியும் பூனையுமா இருந்தவங்க எல்லாம் இப்போ ஒன்ணு கூடிட்டாங்களே 

ஒவ்வொருத்தருக்கும் அவங்க வீட்ல இருந்து வந்த கடிதங்களையும் பரிசுப் பொருட்களையும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அனுப்பி வச்சிருந்தார் 

ஒவ்வொரு கடிதமும் வாசிக்க வாசிக்க அவங்க கண்ல மட்டும் இல்லாம நம்ம கண்ல கூட கண்ணீர் வந்திருச்சு. 

எல்லாரும் வானத்தைப் போல குடும்பம் மாதிரி ஆயிட்டாங்க 

ஒவ்வொருத்தரோட மனசுலயும் அன்பும் ஆசைகளும் நெறைய இருக்கு 

ஆமா மச்சி, பக்கத்துல இருக்கற வரைக்கும் அவங்களோட அருமை நமக்குத் தெரியாது. 

சென்றாயனோட கண்ணீர் எல்லாரையும் கலங்க வச்சிருச்சு 

உண்மைல பிக் பாஸ் நம்ம வாழ்க்கையோட கண்ணாடி 

அதுல குறை நிறைகளை பார்த்து நாம நம்மளை திருத்திக்கணும் 

போன வாரம் மும்தாஜை தரக்குறைவா பேசின ஐஸ்வர்யா கூட மும்தாஜை கட்டிப்பிடிச்சு அழுதாங்க 

பகலில் முதல் நாள் பார்த்த சக போட்டியாளர் மீதான எண்ணங்கள் இன்னிக்கு எப்படி மாறி இருக்குன்னு பிக் பாஸ் சொல்ல சொன்ன போது பாலாஜி பேசினப்போ யாஷிகாவோட கண்ணு கலங்கிடுச்சு 

இன்னிக்கு இருக்குற ஒற்றுமை எப்பவும் தொடர்ந்தா நல்லா இருக்கும் 

அது நடக்காது 

ஏன் மச்சி? 



பிக் பாஸ் அதுக்கு மனசு வைக்கணுமே? 

ம்ம்... நாளைக்கு எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிற மாதிரி போட்டி வைப்பார் 

இந்த வாரம் யாரு வெளில போவாங்க? 

டானியல்... 

பாலாஜியா இருக்கலாம் 

ஜனனிக்கு மக்கள் ஆதரவு இருக்குல்ல? 

ம்ம்... இந்த வார வெளியேற்றத்துக்கு ரித்விகாவும் தேர்வாகியிருந்தாங்க 

கமல் தான் நேர்மையான விமர்சனங்களை முன்வைத்ததுக்கு ரித்விகாவை தேர்வு செய்தார்? 

ஆனா அதை வைத்து பிக் பாஸே ரித்விகாவை காப்பாத்திட்டார் 

ம்ம்.. இந்த வாரம் யார்கிட்டயும் பரிந்துரை கேட்காம போன வார போட்டி மூலமா தேர்வானவங்களை வச்சே பிக் பாஸ் சமாளிச்சிட்டார் 

ம்ம்ம்... அவருக்கு சொல்லிக் கொடுக்கவா வேணும்? 

சரி மச்சி, நா பிக் பாஸ்ல வாக்களிக்கப் போகணும்... 

நாங்களும் அதுக்கு தான் போறோம்.

சரி மச்சி வா போகலாம் 

சரிடா, சந்திப்போம். 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

No comments:

Post a Comment