Sunday, September 15, 2019

என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களே... இது நியாயமா?

இன்று பிக்பாஸ் வெளியேற்ற நாள். தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்குத் தான் இன்றைய வெளியேற்றும் படலம். 

ஆனால் பிக்பாஸ் நிர்வாகத்தைப் பொறுத்தவரை நேற்றே வெளியேற்றும் படலம் நிகழ்ந்து முடிந்துவிட்டது. 



பிக்பாஸில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கான அத்தியாயங்கள் சனிக்கிழமையே ஒளிப்பதிவு செய்யப்பட்டு விடும். அதனை நமக்கு இரண்டு நாட்களுக்கு காண்பிக்கிறார்கள். அவ்வளவு தான். 

இன்றைய அத்தியாயத்தில் முக்கியமாகப் பார்க்கப் படுவது சாண்டியின் மாமியார் அவரை பாராட்டிய விதம் தான். 

சாண்டியின் இரண்டாவது திருமணத்தின் மூலம் கிடைத்த மாமியார் இவர். 

ஆனாலும் தாயையும் தந்தையையும் ஒரு சேர தன் மருமகனின் உருவில் பார்ப்பதாக சொன்னது பலரையும் உருக வைத்திருக்கிறது. 

மருமகனை மனிதனாகப் பார்ப்தே அரிதாக இருக்கும் இந்த காலத்தில் அவரை தந்தை, தாயாகப் பார்ப்பதெல்லாம் வேறு ரகம். 

அதிலும், சாண்டியை வெற்றி பெற வைக்க வாக்குக்காக அல்லாமல், உண்மையாகவே மனதில் இருந்து அவர் இதனைக் கூறியிருந்தால் வாழ்த்த வார்த்தைகள் இருக்காது அல்லவா? 

No comments:

Post a Comment