Wednesday, September 25, 2019

ஐந்து இலட்சமா? நூறு நாளா? திக் திக் பிக்பாஸ்...

பிக்பாஸில் எப்போதும் வரும் திக் திக் நிமிடங்கள் இப்போதும் வந்திருக்கிறது. 

இறுதிப் போட்டி நெருங்கி விட்ட நிலையில், ஐந்து இலட்ச ரூபாவுடன் வெளியேறும் வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார். 

இறுதிப் போட்டியில் வெல்பவருக்கு 50 இலட்ச ரூபா வழங்கப்படும். 



போட்டியில் இடை நடுவில் வெளியேற விரும்புபவர் பிக்பாஸ் வழங்கும் ஐந்து இலட்ச ரூபாவை வெற்றியாளரின் பரிசுத் தொகையில் இருந்து எடுத்துக் கொண்டு வெளியேறலாம். 

இந்த அறிவிப்பு வந்ததும் கவின் எழுந்து நிற்கிறார். 

கவின் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாரா இல்லையா என்பதே நம் முன் உள்ள கேள்வி. 

கவின் ஐந்து இலட்ச ரூபாவை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை யாரும் அவ்வாறு வெளியேறியதில்லை. கவின் செய்தது என்ன? 

இதோ: 



Sunday, September 15, 2019

என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களே... இது நியாயமா?

இன்று பிக்பாஸ் வெளியேற்ற நாள். தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்குத் தான் இன்றைய வெளியேற்றும் படலம். 

ஆனால் பிக்பாஸ் நிர்வாகத்தைப் பொறுத்தவரை நேற்றே வெளியேற்றும் படலம் நிகழ்ந்து முடிந்துவிட்டது. 



பிக்பாஸில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கான அத்தியாயங்கள் சனிக்கிழமையே ஒளிப்பதிவு செய்யப்பட்டு விடும். அதனை நமக்கு இரண்டு நாட்களுக்கு காண்பிக்கிறார்கள். அவ்வளவு தான். 

இன்றைய அத்தியாயத்தில் முக்கியமாகப் பார்க்கப் படுவது சாண்டியின் மாமியார் அவரை பாராட்டிய விதம் தான். 

சாண்டியின் இரண்டாவது திருமணத்தின் மூலம் கிடைத்த மாமியார் இவர். 

ஆனாலும் தாயையும் தந்தையையும் ஒரு சேர தன் மருமகனின் உருவில் பார்ப்பதாக சொன்னது பலரையும் உருக வைத்திருக்கிறது. 

மருமகனை மனிதனாகப் பார்ப்தே அரிதாக இருக்கும் இந்த காலத்தில் அவரை தந்தை, தாயாகப் பார்ப்பதெல்லாம் வேறு ரகம். 

அதிலும், சாண்டியை வெற்றி பெற வைக்க வாக்குக்காக அல்லாமல், உண்மையாகவே மனதில் இருந்து அவர் இதனைக் கூறியிருந்தால் வாழ்த்த வார்த்தைகள் இருக்காது அல்லவா? 

Saturday, September 14, 2019

என்னதான் நடக்கிறது பிக்பாஸில்?

என்ன தான் ஆச்சு நம்ம பிக்பாஸுக்கு என்பதே நேயர்களின் கேள்வியாக இருக்கிறது. 



ஏனெனில் கடந்த இரண்டு பருவங்களிலுமே இந்த நேரத்தில் அனல் பறக்கும் இறுதிக் கட்ட போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. 

ஆனால் இந்த முறை இறுதிக்கட்ட போட்டிகள் நடப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தாலும் பிக்பாஸின் வெற்றி அது மட்டும் அல்லவே?

இறுதிக்கட்ட போட்டி என்றாலே அதில் கடுமையான அணுகுமுறை காணப்படவேண்டும்.

ஆனால் இங்கோ காதலையும் நட்பையும் மட்டும் வைத்து வியாபாரம் பார்க்க முயற்சித்து வருகின்றனர்.

இன்னும் மூன்று வாரங்கள் போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனிவரும் நாட்களிலாவது பிக்பாஸ் களைகட்டுமா?

பொறுத்திருந்து பார்க்கலாம்...

Friday, September 13, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | ஷெரினின் அம்மா செய்த காரியம்...!








பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | ஷெரினின் அம்மா செய்த காரியம்...!  
https://sigarambiggboss.blogspot.com/2019/09/bigg-boss-tamil-season-3-promo-21-vijay-tv.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #KamalHassan #BB #BBTamil3 #BB3 #BiggBoss3 #BiggBossContestants #BBTamilContestants #BiggBossOpening #BBJune