Tuesday, June 25, 2019

பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் 01 | நாள் 01 | வணக்கம் பிக் பாஸ்!

பிக் பாஸ் புதிய பருவம் தொடங்கிவிட்டது. நமக்கெல்லாம் இனி கொண்டாட்டம் தான். 

முதல்கட்டமாக 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் கமல் தன் கையில் 17 பேரின் பெயர்கள் இருப்பதாகவும் மிகுதி பேர் பிறகு வீட்டுக்குள் வரக்கூடும் எனவும் தெரிவித்தமை கவனிக்கத்தக்கது. 



இலங்கையைச் சேர்ந்த லோஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோரும் மலேஷியாவைச் சேர்ந்த முகேன் ராவ் ஆகியோரும் இந்தியரல்லாதோராக முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர் தளத்தை விரிவுபடுத்த விஜய் தொலைக்காட்சி நடவடிக்கை எடுத்துள்ளமையை அவதானிக்கலாம். 

பிக் பாஸ் மூன்றாம் பருவ இல்லத்தின் முதல் வார தலைவராக வனிதா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சமையல், வீடு சுத்தம், கழிவறை சுத்தம் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. 

முதல்நாள் நிகழ்வுகள் மிகவும் கலகலப்பாகவே அமைந்தன. இனி தானே ஆட்டம் ஆரம்பம்? 

இவங்களுக்கு 'சரவணன் மீனாட்சி' புகழ் கவின் மேல ஒரு ஈர்ப்பாம். குறிச்சி வச்சுக்கோங்க மக்களே! (மேக்கப்பை கலைத்ததும் பெயர் தெரியாததால் இங்கு குறிப்பிடவில்லை)

எமது வலைத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள். 

வாழ்க பிக் பாஸ்! 

பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் 01 | நாள் 01 | வணக்கம் பிக் பாஸ்! 
https://sigarambiggboss.blogspot.com/2019/06/BBTamil3-Week01-D01-welcome-biggboss.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #KamalHassan #BB #BBTamil3 #BB3 #BiggBoss3 #BiggBossContestants #BBTamilContestants #BiggBossOpening #BBJune #BiggBossTamil3 

No comments:

Post a Comment