Saturday, November 3, 2018

பிக் பாஸ் தமிழ் 2 | உங்கள் அபிமான போட்டியாளர் யார் | மக்கள் வாக்கெடுப்பு முடிவுகள்

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது. மக்களின் அமோக வாக்குகளின் மூலம் ரித்விகா வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கினார். இரண்டாம் இடத்தை ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். 

முதலாம் பருவத்தில் ஆரவ் மகுடம் சூடியிருந்தார். இம்முறையும் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்வை பிரம்மாண்டமாக விஜய் தொலைக்காட்சி நடாத்தியிருந்தது. 

'சிகரம்' இணையத்தளம் சார்பாக பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் இடம்பெற்ற காலப்பகுதியில் 'உங்கள் மனம் கவர்ந்த பிக் பாஸ் போட்டியாளர் யார்? Who is your favorite Bigg Boss Contestant?' என்னும் மக்கள் வாக்கெடுப்பை நடாத்தியிருந்தோம். இதோ நமது வாக்களிப்பின் உத்தியோகபூர்வ முடிவுகள்: 




ரித்விகா RIYTHVIKA - 358 வாக்குகள் - 23% 

ஐஸ்வர்யா AISHWARYA - 229 வாக்குகள் - 15% 

மும்தாஜ் MUMTAZ - 227 வாக்குகள் - 14% 

ஜனனி JANANI - 139 வாக்குகள் - 09% 

சென்றாயன் SENRAYAN - 131 வாக்குகள் - 08% 

பொன்னம்பலம் PONNAMBALAM - 109 வாக்குகள் - 07% 

டேனியல் DANIEL - 90 வாக்குகள் - 06% 

யாஷிகா YASHIKA - 71 வாக்குகள் - 05% 

பாலாஜி BHALAJIE - 69 வாக்குகள் - 04% 

ரம்யா RAMYA - 42 வாக்குகள் - 03% 

நித்யா NITHYA - 37 வாக்குகள் - 02% 

மஹத் MAHATH - 29 வாக்குகள் - 02% 

அனந்த் ANANTH - 15 வாக்குகள் - 01% 

ஷாரிக் SHARIQ - 09 வாக்குகள் - 01% 

மமதி MAMATHI - 07 வாக்குகள் - 00% 

வைஷ்ணவி VAISHNAVI - 04 வாக்குகள் - 00% 

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்: 1566 
வாக்கெடுப்புக்கான போட்டியாளர்கள்: 16 பேர். 

*விஜயலட்சுமி வாக்கெடுப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் வெற்றி வாகை சூடியது போலவே ரித்விகா 'சிகரம்' இணையத்தள வாசகர்களின் அபிமான போட்டியாளர் பட்டத்தையும் வென்றிருக்கிறார். வாழ்த்துகள் ரித்விகா! 

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவ போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் வெற்றிகரமாக கால் பதித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் அவர்கள் நடித்த திரைப்படங்கள் திரைக்கு வரும் என எதிர் பார்க்கலாம். 

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழின் முதல் இரு பருவங்களையும் திறம்பட தொகுத்து வழங்கிச் சென்றிருக்கிறார். மூன்றாம் பருவத்தை தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருக்கிறது. 

கமல் தீவிர அரசியலில் இறங்கினால் அல்லது தேர்தலை சந்திக்க நேர்ந்தால் புதிய தொகுப்பாளர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரலாம். சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற யாரேனும் திரையில் தோன்றலாம். பிக் பாஸ் தமிழ் முன்றாம் பருவம் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களுக்கு 'சிகரம்' இணையத்தளத்துடன் இணைந்திருங்கள். வதந்திகளை நம்பி ஏமாறாதீர்கள்! 

பிக் பாஸ் தமிழ் - மூன்றாம் பருவம் 

காத்திருங்கள்! 

பிக் பாஸ் தமிழ் 2 | உங்கள் அபிமான போட்டியாளர் யார் | மக்கள் வாக்கெடுப்பு முடிவுகள்  
https://sigarambiggboss.blogspot.com/2018/11/bigg-boss-tamil-2-who-is-your-most-favorite-contestant-vote-results.html 
#BiggBoss #BiggBossTamil2 #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #BBTamil3 #Riythvika #Simbu #Mahath #Senrayan #BiggBossTamil #VijayTV #Aarav #Oviya #Snehan #BiggBossTamilVote #SigaramCO 

No comments:

Post a Comment