Monday, September 3, 2018

BBTamil 2 | Week 11 | Day 72-79 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 11 | நாள் 72-79 | குடும்ப வாரம்

ஹாய் மச்சி 

சொல்லு மச்சி 

என்ன மச்சி, இந்த வாரம் ஆளையே காணோம்? 

அழுது அழுது காய்ச்சல் வந்துருச்சி டா... 

ம்ம்... இந்த வாரம் பிக் பாஸ்ல ஒரே கண்ணீர் மழை 

வறண்ட காவேரி நதியிலயே வெள்ளம் வர்ற அளவுக்கில்ல அழுதாங்க? 

அதுனால தான் கமல் பிக் பாஸ் வீட்டை கழுவுற அளவுக்கு கண்ணீர் னு குறிப்பிட்டார் 

அதுனா உண்மை தான். 

ஒவ்வொருத்தருக்குள்ளயும் எவ்வளவு கஷ்டம் இருந்திருக்குன்னு இப்போ தான் புரிஞ்சிக்க முடியுது 

சினிமாக்காரங்கன்னாலே அவங்களுக்குப் பின்னாடியும் கஷ்டம் இருக்கும்னு நாம நெனச்சுப் பாக்குறதே இல்லை 

சினிமாக்காரங்களுக்கு மட்டுமில்ல, எல்லாருக்குள்ளயும் சோகங்களும் கஷ்டங்களும் இருக்கு. நாம தான் அதைப் புரிஞ்சு நடந்துக்கணும் 



ம்ம்... இந்த முறையும் சனிக்கிழமை ஜோர், ஞாயிறு போர். 

இந்த முறை பிக் பாஸே அப்படி தானே இருக்கு? 

பாலாஜி வெளியேறுவார்னு பலபேர் எதிர்வு கூறியிருந்தாங்க 

ஆனா டேனியல் ஏன் வெளியேற்றப்பட்டார்னு புரியல 

பொதுவாவே விஜய் டிவி ரசிகர்களோட ஆதரவு பாலாஜிக்கு எப்போதுமே உண்டு 

கலக்கப் போவது யாருல கலக்குன நடுவராச்சே? 

ஆமாமா 

ஆனா அந்த ஆதரவுல பிக் பாஸ் பட்டத்தை வெல்ல முடியுமான்றது சந்தேகம் தான் 

டேனியல் வெளில போனது யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தான் இழப்பு 

இல்லை, நல்லது தான். ஏன்னா டேனியல் கடுமையான போட்டியாளர். அவர் வெளில போனது அவங்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் நல்லது தான். 

ம்ம்... உத்தம வில்லன்கள் போட்டியில சின்னப் பசங்க மாதிரி என்னை இடிச்சான், குத்தினான், கடிச்சான்னு குறை சொல்லிக்கிட்டிருந்தது மக்களுக்குப் பிடிக்கலையோ? 

இருக்கலாம். 

இல்லன்னா டேனி குடுத்த முத்தம் காரணமா? 

ஏதோ உணர்ச்சி வேகத்துல காதலிக்கு அப்படிக் கொடுத்துட்டாரு, என்ன பண்ண முடியும்? 

அது தான் மக்கள் பண்ணிட்டாங்களே? 

ஆரம்பத்துல டேனியை மக்களுக்குப் பிடிச்சாலும் போகப் போக அவரோட நடவடிக்கைகள் பிடிக்காம போச்சு 

டேனி எப்பவுமே தன்னை மட்டுமே காப்பாத்திக்க நினைப்பார். அதுக்காக என்ன வேணுன்னாலும் பண்ணுவாரு...

யார் கூட இருந்தா தனக்குப் பாதுகாப்போ அவங்க கூட தான் இருப்பார் 

அதை அவர் புத்திசாலித்தனம்னு நெனைச்சார், மக்கள் பலவீனமா பாத்தாங்க....

ஒரு வேளை இது பிக் பாஸோட திட்டமாக்கூட இருக்கலாம் 

இருக்கும்... இருக்கும்... 

சரி மச்சி கிளம்பலாம் 

ஆமா மச்சி, இந்த வாரம் யாரை வெளில அனுப்பறதுன்னு யோசிக்கணும் 

சரி மச்சி சந்திக்கலாம் 

சரி மச்சி 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

No comments:

Post a Comment