Monday, September 11, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்ட சுஜா

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பதினோராம் வாரத்துக்கான ஞாயிறு அத்தியாயம் ஒளிபரப்பாகி முடிந்துள்ளது. பதினோராம் வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் உறுப்பினர்கள் இந்த வாரம் யாரையும் வெளியேற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தனர். பிக்பாஸ் தனது சர்வதேச விதிமுறைகளின் ஊடாக அதற்கு செவிசாய்த்துள்ளார். 

"சிகரம்" இணையத்தளம் எதிர்வு கூறியபடி வெளியேற்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டார் சுஜா. வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் உறைந்த நிலையில் இருக்குமாறு கமலினால் பணிக்கப்பட்டு சுஜாவை விடைபெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். சுஜா பிரதான கதவை நெருங்கியிருந்த போது அனைவரும் இயல்புநிலைக்கு வரவைக்கப் பட்டனர்.



வையாபுரி சுஜா மீண்டும் வீட்டுக்குள் வரக்கூடும் என்பதை யூகித்தார். போலியான வெளியேற்றம் (Fake Eviction) மூலம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சுஜா மேடைக்கு வராமல் வீட்டின் ஒரு பகுதியில் உள்ள இரகசிய அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்தபடி அவர் கமலுடன் உரையாடினார். போலி வெளியேற்றம் சர்வதேச நிகழ்ச்சிகளில் பலமுறை நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

இரகசிய அறையில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ள சுஜா இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கவைக்கப்படலாம். அதன் பின்னர் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுவார். இரகசிய அறையில் பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி மூலம் பிக்பாஸ் வீட்டின் ஏனைய உறுப்பினர்களின் செயற்பாடுகளை சுஜா அவதானிக்க முடியும். 

"என்னடா இது? நாம கஷ்டப்பட்டு வாக்களிச்சு ஒருத்தரை வெளியேத்தினா இப்படி செய்கிறார்களே?" என்று நீங்கள் யோசிக்கலாம். இது ஒரு சர்வதேச நிகழ்ச்சி அமைப்பு. எனவே அதன்படிதான் விதிமுறைகளும் இருக்கும். 

#BiggBoss #BiggBossTamil #Suja #Sujaa #SujaVarunee #SujaaVarunee #Vijaytv #KamalHassan #BBEviction #BB #SIGARAMCO 




11.09.2017 

No comments:

Post a Comment