Friday, October 23, 2020

பிக்பாஸ் தமிழ் பருவம் 4 -இதுவரை...!

 பிக்பாஸ்... 


தமிழில் நான்காவது பருவத்தையும் வெற்றி கரமாகத் துவங்கியிருக்கிறது. 


ஆனால் எல்லோரும் சொல்வது ஒன்றைத்தான். முதல் பருவம் போல ஏனைய பருவங்கள் இல்லை என்றுதான். 





ஒன்றைப் போலவே எல்லாம் இருக்குமா என்ன? என்றாலும், எல்லோரும் வெல்ல வேண்டும் என நினைத்த ஓவியா, இடை நடுவிலேயே விலகியதும் பலருக்கு பிக்பாஸ் மீது கசப்பை ஏற்படுத்தி விட்டது. 


சரி, அது இருக்கட்டும். இப்போது 18 நாட்கள் கடந்துவிட்டன. ரேகா வெளியேறிவிட்டார். 


ம்....ம்....ம்....


சரியா சொல்றேனா??? 


18ஆம் நாள்ல பட்டிமன்றம். நிஷா அருமையா பேசினாங்க. அனிதா சம்பத் சிறப்பு. மத்தவங்க பரவாயில்லை. 


யாரப்பா அது, நடுவருக்கே அறிவுரை சொல்றது? அதையும் அருமையா சமாளிச்சாங்க... நல்லது. 


பிக்பாஸ் எப்பவுமே கொளுத்தி போடுறதுல வல்லவர். மறைமுகமா அவர் முயற்சி பண்ணும்போதே நாம பிரச்சினை பண்ணிடனும். ஆனா அதை விட்டுவிட்டு நன்மை, குடும்பம், ஒற்றுமைன்னுலாம் பேசிகிட்டிருந்தா அவ்ளோதான். அவர் நேரடியாவே களத்துல இறங்கி நேருக்கு நேர் குறை சொல்ல வச்சிடுவார். 


சோ .... பீ கேர் புல் கன்டெஸ்டன்ட்ஸ்!!! 


இன்னிக்கு இரவும் சில சம்பவங்கள் இருக்கு. நாளை அவர் வந்து கொஞ்சம் கலாட்டா பண்ணுவார். 


வெளியேறப் போறது யார்? இதுதான் இப்போ மில்லியன் டொலர் கேள்வி!


ஆமா.... அது யாரு?

Tuesday, January 7, 2020

பிக் பாஸ் தமிழ் | பருவம் 04 | புதிய தசாப்தத்தின் புதிய பிக்பாஸ்...!

பிக் பாஸ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். 2020 பிறந்திருக்கிறது. இந்த நேரத்தில் அடுத்த பிக் பாஸ் ஆரம்பமாகப் போகிறது என்பதையும் ஞாபகப்படுத்த வேண்டும். 

ஆம். இன்னும் 200 நாட்கள் மட்டுமே இருக்கின்றன, பிக் பாஸ் ஆரம்பிக்க. 

மூன்று வெற்றிகரமான பருவங்களைக் கடந்து நான்காம் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது பிக் பாஸ் தமிழ்! 

பல இலட்சம் மக்களை தன்வசம் ஈர்த்து வைத்திருந்த பிக் பாஸுக்கு மீண்டும் வேலை வரப் போகிறது. 

கடந்த பிக் பாஸ் பருவங்கள் மீது ஒரு பார்வை:



பருவம் 01: 

போட்டி காலம்: 27 ஜூன் 2017 - 30 செப்டம்பர் 2017 

வாசகம்: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது 

வெற்றியாளர்: ஆரவ் 

இரண்டாம் இடம்: சினேகன் 

பருவம் 02: 

போட்டி காலம்: 17 ஜூன் 2018 - 30 செப்டம்பர் 2018 

வாசகம்: நல்லவர் யார், கெட்டவர் யார்?

வெற்றியாளர்: ரித்விகா 

இரண்டாம் இடம்: ஐஸ்வர்யா தத்தா 

பருவம் 03: 

போட்டி காலம் : 23 ஜூன் 2019 - 06 அக்டோபர் 2019 

வாசகம்: இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப் 

வெற்றியாளர்: முகேன் ராவ் 

இரண்டாம் இடம்: சாண்டி 

பருவம் 04:

போட்டி காலம்: 21 ஜூன் 2020 - 04 அக்டோபர் 2020 

வாசகம்: ஒரு முகம், பல குணம், இது யார்?

வெற்றியாளர்: விரைவில்....

வாருங்கள், நாமும் புதிய பிக் பாஸை நோக்கிப் பயணிக்கலாம்....