Friday, October 23, 2020

பிக்பாஸ் தமிழ் பருவம் 4 -இதுவரை...!

 பிக்பாஸ்... 


தமிழில் நான்காவது பருவத்தையும் வெற்றி கரமாகத் துவங்கியிருக்கிறது. 


ஆனால் எல்லோரும் சொல்வது ஒன்றைத்தான். முதல் பருவம் போல ஏனைய பருவங்கள் இல்லை என்றுதான். 





ஒன்றைப் போலவே எல்லாம் இருக்குமா என்ன? என்றாலும், எல்லோரும் வெல்ல வேண்டும் என நினைத்த ஓவியா, இடை நடுவிலேயே விலகியதும் பலருக்கு பிக்பாஸ் மீது கசப்பை ஏற்படுத்தி விட்டது. 


சரி, அது இருக்கட்டும். இப்போது 18 நாட்கள் கடந்துவிட்டன. ரேகா வெளியேறிவிட்டார். 


ம்....ம்....ம்....


சரியா சொல்றேனா??? 


18ஆம் நாள்ல பட்டிமன்றம். நிஷா அருமையா பேசினாங்க. அனிதா சம்பத் சிறப்பு. மத்தவங்க பரவாயில்லை. 


யாரப்பா அது, நடுவருக்கே அறிவுரை சொல்றது? அதையும் அருமையா சமாளிச்சாங்க... நல்லது. 


பிக்பாஸ் எப்பவுமே கொளுத்தி போடுறதுல வல்லவர். மறைமுகமா அவர் முயற்சி பண்ணும்போதே நாம பிரச்சினை பண்ணிடனும். ஆனா அதை விட்டுவிட்டு நன்மை, குடும்பம், ஒற்றுமைன்னுலாம் பேசிகிட்டிருந்தா அவ்ளோதான். அவர் நேரடியாவே களத்துல இறங்கி நேருக்கு நேர் குறை சொல்ல வச்சிடுவார். 


சோ .... பீ கேர் புல் கன்டெஸ்டன்ட்ஸ்!!! 


இன்னிக்கு இரவும் சில சம்பவங்கள் இருக்கு. நாளை அவர் வந்து கொஞ்சம் கலாட்டா பண்ணுவார். 


வெளியேறப் போறது யார்? இதுதான் இப்போ மில்லியன் டொலர் கேள்வி!


ஆமா.... அது யாரு?